சனி, 20 நவம்பர், 2010

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் புதிய வலையமைப்பு செயற்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது!

புலிகளின் ஈழ வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக இலங்கையில் விசேட வலையமைப்பொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் இந்த புதிய வலையமைப்பு செயற்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் மக்களை இணைத்து இந்த வலையமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

குறிப்பாக புலிகளின் பிரச்சார வலையமைப்பை தகர்த்தெறிவதனை இலக்காக வைத்து இந்த புதிய வலையமைப்பை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

அதேவேளை அரசாங்கப் படையினருக்கு எதிராக சுமத்தப்படும் காழ்ப்புணர்ச்சி மிக்க குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வப்போது உரிய பதிலளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல