சனி, 20 நவம்பர், 2010

மன்னாரில் அநாதைச் சடலம் மீட்பு : அரச செலவில் அடக்கம் செய்ய நீதிபதி உத்தரவு

மன்னார் புனித செபஸ்தியார் தேவாலய வளாகத்தினுள் கடந்த 06ஆம் திகதி நஞ்சருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் மீட்கப்பட்டார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தினர்.

பின் இன்று சனிக்கிழமை அரச செலவில் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவரானி நேற்று மன்னார் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 06ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் செபஸ்தியார் ஆலய வளாகத்தினுள் சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

உடனும் குறித்த வயோதிபர் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவரானி மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த வயோதிபரின் சடலத்தைப் பார்வையிட்டார். அடையாளம் காண்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை வரை வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

எனினும் நேற்றுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை. இந்த நிலையில் பிரேதப் பரிசோதனையின் பின் இன்று அரச செலவில் அடக்கம் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல