சனி, 20 நவம்பர், 2010

மஞ்சள் காமாலை

1.மஞ்சள்காமாலை ஹெபடைட்டிஸ் என்றால் என்ன?

மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில்(LIVER) கிருமித்தொற்று ஏற்படுவதைக் குறிக்கிறது.

2.பொதுவாக மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக A,B,C என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வைரஸ் கிருமி( தீ நுண்மம்) களால் ஏற்படுகிறது.

3.மஞ்சள்காமாலை ஏ (HEPATITIS-A) மஞ்சள்காமாலை ஏ பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்

இது குழந்தைகளை அதிகம் தாக்குகிறது.

மனித மலம் சிறு அளவில் விரல்களில், நக இடைவெளியில் இருக்கும். இது உணவில், நீரில் கலக்கிறது. அந்த நீர் மற்றும் உணவை நாம் சாப்பிடும்போது அது நம்மைத் தொற்றிக்கொள்கிறது. சமையல்காரர்கள் மற்றும் உணவுக்கூடங்களில் இருப்போர் மற்றும் அனைவரும் மலம் கழித்த பின் சோப்புப்போட்டுக் கை கழுவுதல், கையுறை அணிந்து சமைத்தல், குடிக்கும் தண்ணீரில் கை படாமல் இருப்பது ஆகியவை அவசியம். ஆகையாலேயே வெளியில் சாப்பிடும்போது நல்ல சுகாதாரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும்.

இந்தக் கிருமி தொற்றிய 15-50 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றும்.
மிதமான காய்ச்சல், அதிக சோர்வு, உமட்டல், மேல் வயிற்று வலி, வாந்தி ஆகியவை இருக்கும். குழந்தைகள் படிக்காமல் சோர்வாகப் படுத்திருந்தாலும், குறைந்த மிதமான காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று மிதமாக இருத்தல் தவறு.
அதன் பின் சிறு நீர் மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் போகும். கண்ணின் வெண்ணிறப்பகுதி, உடலின் தோல் பகுதிகளில் மஞ்சள் நிறம் காணப்படும். இந்த மஞ்சள் நிறம் ஒரு வாரத்தில் இருந்து நான்கு வாரங்கள் வரை இருக்கும்.

A வைரஸினால் வரும் மஞ்சள் காமாலை தன்னாலேயே சரியாகிவிடும் தன்மை உடையது. ஆயினும் சில குழந்தைகள் வாந்தி, தலைவலி,சாப்பாடு செரிக்காமல் இருத்தல், பசியின்மை ஆகியவற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். ஆதலால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுதல் அவசியமாக இருக்கும். காய்ச்சலுக்கு பாரசிடமால் போன்ற சாதாரண மாத்திரையும், வாந்திக்கு மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம்.

இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக்கி விடுவதால் இது மறுபடியும் வருவது இல்லை.
இதற்கு இரத்தப் பரிசோதனை செய்து கல்லீரலின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இரத்தப்பரிசோதனை மூலம் A வகை மஞ்சள்காமாலைதானா அல்லது B, C போன்ற வேறு வகை மஞ்சள்காமாலையா என்பதனையும் அறிவது அவசியம்.

வயிறு ஸ்கேன் செய்து கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றின் வீக்கம், நோய் எவ்வளவு தூரம் அவற்றை பாதித்துள்ளது என்பதனையும் அறிவது அவசியம்.

இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இத்தடுப்பூசியானது 20 வருடத்துக்கும் மேல் இந்த ஏ வகை மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல