இதனை, ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் சற்றுமுன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கை மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறும் வழக்கை துரிதப்படுத்துமாறும் கோரி தேவதாசன் உண்ணாவிரதம் இருந்தார்.
இவரது உடல் நிலை மோசமாகி வந்ததைத் தொடர்ந்து தமிழ்க் கட்சிகளின் அரங்க உறுப்பினர்களாக டெலோ ஸ்ரீ உதயராஜன், சுரேந்திரன் மற்றும் குமரகுருபரன் ஆகியோர் இன்று அவரைச் சந்தித்தனர்.
வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்த வேண்டியது சட்டத்தின் பிரகாரம் உள்ளதெனவும் விசாரணைகளைத் துரிதப்படுத்த அழுத்தம் கொடுப்பதாகவும் வழங்கிய உறுதிமொழியையடுத்து பிற்பகல் 1.00 மணியளவில் உண்ணாவிரதத்தை கனகசபை தேவதாசன் முடித்துக் கொண்டுள்ளார்.
"வழக்கு துரிதப்படுத்தப்பட்டு விரைவில் தீர்மானம் வழங்கப்பட வேண்டும். குடும்பத்தினருடன் சேர்ந்துவாழ சந்தர்ப்பம் கிடைப்பதையே எதிர்பார்க்கிறேன். இனிமேலும் காலம் தாழ்த்தப்படுமானால் தற்கொலை செய்வதைத் தவிர, வேறு வழியில்லை" என தேவதாசன் தம்மிடம் கூறியதாக குருபரன் எமக்குத் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக