சனி, 20 நவம்பர், 2010

புலிகளின் இராணுவ தலைவர்கள் சரணடைந்ததாக அவர்களின் மனைவிமார் வெளியிட்டுள்ள தகவல்களை முற்றாக நிராகரிப்பதாக சவேந்திர சில்வா தெரிவிப்பு!

புலிகளின் இராணுவ தலைவர்கள், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக அவர்களின் மனைவிமார் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் வெளியிட்டுள்ள தகவல்களை முற்றாக நிராகரிப்பதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி, யாழ்ப்பாணத்திற்கான புலிகளின் கட்டளைத் தளபதி தீபன் உள்ளிட்ட தலைவர்கள் சிவில் உடையில் இருந்தவாறே போரிட்டதாகவும் தீபனின் சடலத்தை தாம் தனிப்பட்ட ரீதியில் அடையாளம் கண்டதாகவும் இவர் சாதாரண உடையில் காணப்பட்டதாகவும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இந்த நிலையில், புலிகளின் தலைவர்கள் எவரும் சரணடையவில்லை எனவும் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார் எவ்வாறாயினும் புலிகளின் தலைவர்களான புலித் தேவன், நடேசன், ரமேஷ், எழிலன், யோகி, பாலகுமார். இளம்பருதி, கவிஞர் புதுவை இரத்தினதுரை உட்பட பலர் இராணுவத்திடம் சரணடைந்தாகவும் இவர்களை இராணுவத்தினர் தனியான வாகனங்களில் அழைத்துச் சென்றதாக சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் நோர்வே தரப்பின் ஊடாக வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புலித்தேவன், நடேசன், ரமேஷ் ஆகியோர் வெள்ளை கொடிகளுடன் சரணடைந்தாகவும் எனினும் இவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், உண்மைகள் வெளியாகும் பட்சத்தில் போர் குற்றம் ஊர்ஜிதமாகும் என்பதால், இலங்கை அரச தரப்பு இராணுவ இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல