சனி, 20 நவம்பர், 2010

ஒபாமாவை தோற்கடிப்பேன்

கடந்த முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த சாரா பாலின் ஒரு பேட்டியில் அடுத்த முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை தோற்கடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

குடியரசு கட்சி சார்பில்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் 2008-ம் ஆண்டு நடந்த போது ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் சாரா பாலின் என்ற பெண் ஆவார். அப்போது இவர் அலாஸ்கா மாநில கவர்னராக இருந்தார். இந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தான் தேர்தலில் குதித்தார்.

தோற்கடிப்பேன்

அவர் இப்போது ஒரு டி.வி.சேனலுக்கு பேட்டி அளித்தார்.

இந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

2012-ம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் யோசித்து வருகிறேன். இது தொடர்பாக நான் என் குடும்பத்தினருடன் ஆலோசித்து வருகிறேன்.

2012-ம் ஆண்டு தேர்தலில் ஒபாமா போட்டியிட்டால் அவரை தோற்கடிப்பேன்.

இவ்வாறு சாராபாலின் கூறினார்.

டி.வி.நிகழ்ச்சி மூலம் பிரபலம்

சாரா பாலின் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இப்போது அவர் பாக்ஸ் நிïஸ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பதோடு, அவர் லேர்னிங் சேனல் கேபிள் டி.வி. சேனலில் ஒளிபரப்பாகி வரும் சாரா பாலின்ஸ் அலாஸ்கா நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக அவர் ஒரு பகுதிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கன் டாலர் (கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்)ஊதியம் பெற்று வருகிறார். முதல் நாள் நிகழ்ச்சியை 50 லட்சம் மக்கள் பார்த்து இருக்கிறார்கள்.

இடைத்தேர்தலில் குடியரசு கட்சியினர் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாரா பாலினின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல