இந்த நிலையில் தான் இந்த இயக்கம் மிக மோசமான ஆபத்தான இயக்கம் என்று அமெரிக்க அதிகாரி டேனியல் பெஞ்சமின் தெரிவித்து இருக்கிறார்.
தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான ஒருங்கிணைப்பாளரான டேனியல் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர் இயக்கம் மிக மோசமான ஆபத்தானது. இது சமூக சேவையில் ஈடுபடுவதாக கூறிக்கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதை வளரவிடக்கூடாது. அது நாட்டை அழிக்கவும் அனுமதிக்கவும் கூடாது. இந்த இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் எதிர்காலத்தில் எந்த ஒரு தாக்குதலிலும் ஈடுபட முடியாதவாறு தடுக்கவேண்டும். இதற்கு பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு டேனியல் பெஞ்சமின் கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக