சனி, 20 நவம்பர், 2010

3 தமிழர்களையும் நாடு கடத்துமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்குள் பிரவேசித்து சட்டவிரோதமாக குடியேறமுற்பட்ட 3 இலங்கை தமிழர்களையும் நாடு கடத்துமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப் பட்ட இவர்கள் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

மெக்சிக்கோவின் சியோ கிரேண்ட் நதியின் ஊடாக இவர்கள் அமெரிக்கா செல்ல முற்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைகளின்போது, தமக்கு மெக்சிக்கோவின் சில சுற்றுலா வழிகாட்டல்கள் உதவிசெய்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களை 4 முதல் 6 வாரங்களுக்கு சிறையில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.

கைதானவர்கள் ரூபன் சிவகிநாதன், ரிச்சார்ட் பத்திநாதர் மற்றும் ரமேஸ் மகேஸ்வரன் ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல