குறித்த இரு லெபனானிய குடியேற்றவாசிகளும் திருமணத்தின் பின் சிறிது காலம் மகிழவாக நேரத்தினை கழிக்க இலங்கை விஜயம் செய்ததாகவும், அவர்களில் ஒருவர் தனது நண்பரெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
தனது நண்பர் தன்னை சந்திக்க வந்தேவேளை தான் போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்ததாகவும், அவ்வேளை தன்னோடு இணைந்து கொண்ட அவர்களை போராட்டத்தில் குற்றம்சுமத்தி நாடு கடத்தியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது நண்பர் உலக இளைஞர் மற்றும் மாணவர் சம்மேளனக் குழு உறுப்பினர் எனவும் எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை தென்னாபிரிக்கா நடைபெறவுள்ள நிகழ்வில் அவர் கொள்ளவுள்ளார் எனவும், இலங்கையில் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து அவர் அங்கு தெரிவிப்பாரானால் இலங்கையின் மதிப்புக்கு பாரயதொரு பங்கம் ஏற்படும் எனவும் சுனில்ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக