வடக்கிலும் தெற்கிலும் நிலத்தின் கீழ் அமைந்த பாதுகாப்பு அரண்களும் அதிகார வர்க்கமும்
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் தொடங்கியதும் இலங்கைத்தமிழ் சமூகத்தினரிடம் பதுங்கு குழிகள் பேசுபொருளானது. உயிருக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது ஒவ்வொருவரும் தம்மைப்பாதுகாத்துக்கொள்ள இருப்பிடங்களைவிட்டு ஓடுவார்கள். முடியாதவர்கள், எங்காவது பதுங்குவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் வட இலங்கையில் ஆயுத நெருக்கடி வந்ததும் பதுங்குகுழிகள் தோன்றின.









































