“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது ஔவையாரின் முது மொழி. “ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். மனதில் அமைதியில்லாதவர்கள், மனதில் பல்வேறு குறைகள் உள்ளவர்கள் மன அமைதியை வேண்டி பிரார்த்தனை செய்யும் இடம், தங்களது உள்ளக் குமுறல்களை சொல்லி இறைவனுடன் உரையாடும் இடமாக இவ் ஆலயங்கள், மத நிறுவனங்கள் விளங்குகின்றன.
வியாழன், 31 ஜனவரி, 2013
பிரச்சினையைத் தீர்க்க கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை - ஜெ. புகார்
சென்னை: விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுகுறித்து அவர் கூறியதாவது...
இதுகுறித்து அவர் கூறியதாவது...
ரூ. 100 கோடி முதலீடு என்பது ரிஸ்க் என்று தெரி்ந்துதானே செய்தாரே கமல்?... ஜெ. கேள்வி
சென்னை: ஒரு படத்தில் ரூ.100 கோடியைப் போடுவது என்பது ரிஸ்க் என்று தெரிந்துதானே செய்தார் கமல்ஹாசன். பிறகு நான் எப்படி அவரது பிரச்சினைக்கு பொறுப்பேற்க முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
பிரான்ஸிலிருந்து கடும்போக்கு இமாம்களை நாடுகடத்த திட்டம்
பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை நாடுகடத்த இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனிவல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.பெண்களை மதிக்காத, எமது கலாசாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும், பிரான்ஸூடனான போராட்டத்திற்கு தயாராகும் அனைத்து வெளிநாட்டு மதப் பிரசாரகர்களும் எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர்” என பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பாவிலிருந்து தீவிரவாதத்தை முறியடிப்பது தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
இங்கிலாந்து பத்திரிகையின் கேலிச்சித்திரத்தால் சர்ச்சை
ஹிட்லரின் யூத அழிப்பு ஞாபகார்த்த தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான ‘தி சண்டே டைம்ஸ்’ இஸ்ரேல் தொடர்பில் வெளியிட்ட கேலிச் சித்திரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த கேலிச் சித்திரத்தில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பலஸ்தீனர்கள் உடலுக்கு மேலால் சுவர் எழுப்புவது போன்றும் அதற்கு சீமந்தாக அந்த உடல்களில் இருந்து வழியும் இரத்தத்தை பயன்படுத்துவது போன்றும் அமைந்துள்ளது.
Labels:
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
முஹம்மது நபி
முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துள்ளியமாக அடுத்த தலைமுறைக்கு அறிவித்தது. உலக வரலாற்றில் இது போன்று எந்த ஒரு தலைவரின் வாழ்க்கை குறிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்காது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்
இதுவொரு விஸ்வரூபக் குழப்பம்
மதம் பிடித்த யானைகள் பல
மதம் பிடிக்காத யானைக்கு ஆதரவு என
மதம் பிடித்த யானைகளை தீண்டிப் பார்க்க
மதம் பிடிக்காத யானைகளெல்லாம் நகைக்க
மதம் பிடித்த யானைகள் பல
அர்த்தங்களின்றிய மகிழ்ச்சியில்...
இங்கு யானைகள் என்பது யானைகளே அல்ல!
இது கமல் ஹாசனின் பாணியில் கமலுக்காக விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான விஸ்வரூபக் குழப்பத்தின் இன்றைய நிலைமைகளே.
மதம் பிடிக்காத யானைக்கு ஆதரவு என
மதம் பிடித்த யானைகளை தீண்டிப் பார்க்க
மதம் பிடிக்காத யானைகளெல்லாம் நகைக்க
மதம் பிடித்த யானைகள் பல
அர்த்தங்களின்றிய மகிழ்ச்சியில்...
இங்கு யானைகள் என்பது யானைகளே அல்ல!
இது கமல் ஹாசனின் பாணியில் கமலுக்காக விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான விஸ்வரூபக் குழப்பத்தின் இன்றைய நிலைமைகளே.
Labels:
இஸ்லாம்,
கட்டுரைகள்,
சினிமா
மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு
(பருத்தித்துறை)
வடமராட்சி கிழக்கு தாளையடி உடுத்துறைப் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்தார். நேற்றைய தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் 7 பிள்ளைகளின் தந்தையாரான சின்னத்தம்பி இராஜசிங்கம் (வயது - 51) என்பவரே உயிரிழந்தவராவார்.
வடமராட்சி கிழக்கு தாளையடி உடுத்துறைப் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்தார். நேற்றைய தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் 7 பிள்ளைகளின் தந்தையாரான சின்னத்தம்பி இராஜசிங்கம் (வயது - 51) என்பவரே உயிரிழந்தவராவார்.
Labels:
இலங்கை,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
வரணியில் கத்தி முனையில் கொள்ளை!
வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (29.01.2013) 900,000 ரூபா பெறுமதியான நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
புதன், 30 ஜனவரி, 2013
மீண்டும் நிதி வசூலிப்பில் புலிகள், ஜேர்மன் பொலிஸ் உஷார்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டாய நிதி வசூலிப்பு நடவடிக்கைகளை முறியடிக்கின்றமைக்காக ஜேர்மன் பொலிஸார் மீண்டும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அமெரிக்காவின் எடுபிடியாக செயல்பட்ட சம்பந்தன்! : விக்கிலீக்ஸ்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கி வந்திருக்கின்றார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்வீட்டு இரகசியங்களை இவரை பயன்படுத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் அறிந்து வந்திருக்கின்றார்கள் என்றும் விக்கிலீக்ஸ் மூலம் அதிரடித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Labels:
Wikileaks on Srilanka
செவ்வாய், 29 ஜனவரி, 2013
அமெரிக்காவில் ருத்ரகுமாரன் செயற்படுவதால்,பயங்கரவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை!- விக்கிலீக்ஸ்
அமரிக்காவில் இருந்து விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் ருத்ரகுமாரன் செயற்பட்டுக் கொண்டிருப்பது பிரச்சினையான விடயம் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு அமரிக்கா தூதுவராக பெற்றிசீயா பியுட்டினியஸ் பதவியேற்ற பின்னர் அவருடன் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது மஹிந்த ராஜபக்ச இந்த முறைப்பாட்டை தெரிவித்தாக அமரிக்க தூதரகம் வாசிங்டனுக்கு அறிவித்திருந்தது.
2009 ஆம் ஆண்டு அமரிக்கா தூதுவராக பெற்றிசீயா பியுட்டினியஸ் பதவியேற்ற பின்னர் அவருடன் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது மஹிந்த ராஜபக்ச இந்த முறைப்பாட்டை தெரிவித்தாக அமரிக்க தூதரகம் வாசிங்டனுக்கு அறிவித்திருந்தது.
Labels:
Wikileaks on Srilanka
7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!
நாகை மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 7ம் வகுப்பு மாணவிக்கு நூதனமுறையில் காதல் கடிதம் எழுதி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
கமல்ஹாசன் தலிபான் தலைவர் முல்லா ஓமரை மதுரையில் எங்கே பார்த்தார்?
“ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்று கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் கூறியுள்ளார். எனவே, முல்லா ஓமர் மதுரையில் எங்கே வசித்தார் என்பது குறித்த ஆதாரங்களை கமல்ஹாசனிடம் பெறுவதற்காக மதுரை போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்” என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Labels:
சினிமா
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 33
விடுதலை புலிகள் பெண் உறுப்பினரை சென்னை டில்லி ரயிலில் பின்தொடர்ந்தது சி.பி.ஐ.!
அத்தியாயம் 33
ராஜிவ் கொலை புலனாய்வில், கொலைத் திட்டத்தின் சூத்ரதாரி என கருதப்பட்ட சிவராசனை பிடிக்க எந்த உளவுத் தகவலும் கிடைக்காத நிலையில்தான், சபாபதி பிள்ளை என்ற முதியவர் பற்றிய தகவல் புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்தது. புலனாய்வு குழுவுக்கு கிடைத்த தகவல்களின்படி, அவரது முழுப்பெயர் கனகசபாபதி முத்தையா சிவகுருநாதன் எனத் தெரிந்தது. இவரது மகன் ஹரிசந்திரா, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண தளபதி.
நடிகை தேவயானி பயங்கர கில்லாடி.........
கமலின் விஸ்வரூபம் அளவுக்கு சினிமாக்காரர்களுக்கு பேதி கொடுக்கும் இன்னொரு அதிர்ச்சி… ராஜகுமாரன்! நடிகை தேவயானியின் கணவரான இவர் இயக்கி நடிக்கும் “திருமதி தமிழ்” படத்தின் போஸ்டர்கள், பத்திரிகை ஸ்டில்களைப் பார்த்தவர்கள் மயங்கி விழாத குறைதான்.
“என்னதான் கணவராக இருந்தாலும் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க தேவயானிக்கு எப்படி துணிச்சல் வந்தது” என்று பலரும் அனுதாபப்படுகிறார்கள்.
ஆனால் கோலிவுட் பட்சிகள் சொல்வது அதிர்ச்சி ரகம்!
“என்னதான் கணவராக இருந்தாலும் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க தேவயானிக்கு எப்படி துணிச்சல் வந்தது” என்று பலரும் அனுதாபப்படுகிறார்கள்.
ஆனால் கோலிவுட் பட்சிகள் சொல்வது அதிர்ச்சி ரகம்!
Labels:
சினிமா
திங்கள், 28 ஜனவரி, 2013
கழுத்து, கைவிரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘விஸ்வரூபம்’ படப்பிரச்சனை
‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காண நடிகர் கமலுக்கு நீதிபதி வெங்கட்ராமன் யோசனை தெரிவித்திருக்கிறார்.
கமல் நடித்து டைரக்ஷன் செய்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தை முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள தியேட்டர்களில் திரையிட அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் கடந்த 25-ந் தேதி திட்டமிட்டப்படி படம் ரிலீஸாகவில்லை.
கமல் நடித்து டைரக்ஷன் செய்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தை முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள தியேட்டர்களில் திரையிட அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் கடந்த 25-ந் தேதி திட்டமிட்டப்படி படம் ரிலீஸாகவில்லை.
Labels:
சினிமா
சே, நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது......
DR.George Doodnaught
சே, நினைத்தாலே அறுவறுப்பாக இருக்கிறது.. கனடா பெண்ணின் ஆபரேஷன் அறை 'திகில்' அனுபவம்!
கனடாவைச் சேர்ந்த 41வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் டாக்டர் செய்த பாலியல் சேஷ்டைகள் குறித்து கோர்ட்டில் விவரித்தபோது கடும் வேதனையுடன் அதைக் குறிப்பிட்டார். அவர் சொல்லச் சொல்ல கோர்ட் ஹாலே அதிர்ச்சியுடன் அதைக் கவனித்தது.
Labels:
வினோதமான செய்திகள்
ராஜிவ் காந்தியை கொன்ற தனுவின் ஜாதியை தமிழக அரசு சொன்னதா?
"ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டாகி கொன்றவர் தனு என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அவரது சாதியையா குறிப்பிடுகிறார்கள்
சிலப்பதிகாரத்தை தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்: பொற்கொல்லர்கள் போர்க்கொடி
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் 32 மற்றும் 34ம் பக்கங்களில் பொற்கொல்லர் இனத்தைக் கேவலப்படுத்துவது போன்ற வரிகள் வந்திருக்கின்றன.
Labels:
தமிழர்கள்,
பலதும் பத்தும்
ஞாயிறு, 27 ஜனவரி, 2013
சனி, 26 ஜனவரி, 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 19
இந்தியாவின் தமிழ்நாடு வரையும் விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலிச் சேவை விஸ்தரிப்புப் பெற்றிருந்த போதிலும் இந்த விஸ்தரிப்பானது நீண்டநாட்களுக்கு நிலைத்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளால் நோர்வே அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நவீன வானொலிக் கருவியானது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் போர் மூண்டதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தங்கள் வானொலிச் சேவையை விடுதலைப் புலிகள் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 18
விடுதலைப் புலிகளிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் தேவைப்பட்டியல் உள்ளடங்கிய பட்டியலுடன் நோர்வேக் குழுவினர் உடனடியாகவே தென்பகுதிக்கு விசேட உலங்குவானூர்தியில் விரைந்து சென்றனர். இவ்வாறு சென்ற நோர்வேக் குழுவினர் அரசமட்டத்தில் பேச்சுவார்த்தைக் குழுவின் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
விறகில் பூத்த மலர்
மூன்று பெண்குழந்தைகள், ஓரு ஆண்குழந்தை, தொழில் கூலி. என்றாலும் உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து கொள்ளும் திருப்பதியான வாழ்க்கை. ஊருக்கு ஓரமாக சுழித்துக்கொண்டோடும் மகாவலியின் கிளை ஆற்றைக் கடந்து சென்று வேகத்தீவுக்கு அப்பால் பொலநறுவை வரை பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் சென்று விறகெடுத்து வந்து கொத்திப் பிளந்து கொண்டு சென்று விற்றுப் பின் அன்றைய நாள் சிலவேளை அடுத்த நாளுக்குமான அரிசி, பருப்பு மற்றும் துணைச்சாதனங்கள் வீடு வந்து சேரும்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
சிறுகதைகள்
விஸ்வரூபம்”– திரை விமர்சனம்
சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













































