வியாழன், 30 செப்டம்பர், 2010

பாடகியை கொலை செய்த அரசியல் பிரமுகருக்கு 15 வருட சிறை

பிரபல லெபனானிய பாடகி சூஸன் தாமிமை படுகொலை செய்த குற்றச்சாட்டில் எகிப்திய கோடீஸ்வரரும் அரசியல்வாதியுமான ஒருவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

கம்பி மீது சைக்கிள் பயணம்

சீன வாலிபர் ஒருவர் கம்பி மீது சைக்கிள் ஓட்டி வியக்க வைத்துள்ளாராம்.

போலி பெண் பல் வைத்தியர் பிடிபட்டார்

சரியான கல்வித்தகுதியின்றி பல் மருத்துவர் போல் பொய்யான சான்றிதழ்ளை காட்டி பல மருத்துவமனைகளில் பணியாற்றிய வில்லேன்ஹாலை சேர்ந்த பெண் தன் குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

புதன், 29 செப்டம்பர், 2010

பெண் புலிகளுக்கு வேலை வாய்ப்புகள்

முன்னாள் பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சில நடவடிக்கைகள் இலங்கையில் வடபகுதியில் இடம் பெற்றுள்ளன. புனர்வாழ்வு பெற்றுள்ளவர்ககு இப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குரங்குகளின் திருமணம்

சீனாவின் ஹெபேயி நகரிலுள்ள மிருகக்காட்சிசாலையில் 4 வயதான யங் யங் என்ற ஆண் குரங்கிற்கும் 6 வயதான வான் ஸிங் என்ற பெண் குரங்கிற்கும் செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

1905 தற்கொலை குறிப்பை அனுப்பிவைத்துவிட்டு இறந்த நபர்

அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழகத்துக்கு அருகே கடந்த வாரம் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபரொருவரால் அவரது குடும்பத்தினருக்கும் சுமார் 400 நண்பர்களுக்கும் 1905 பக்கங்களைக் கொண்ட தற்கொலைக் குறிப்பொன்று இலத்திரனியல் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சாண்ட்விச் தயாரிக்க வாங்கிய பாணில் எலி !!!! (படங்கள் இணைப்பு)

தனது பிள்ளைகளுக்கு “சான்ட்விச்' உணவு தயாரிப்பதற்காக வாங்கிய பாணில் இறந்த எலி யொன்று இருப்பதை கண்டு நபரொருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

எகிப்தில் முதல் தடவையாக பெண் வாடகைக்கார் சாரதிகள்

எகிப்திய கெய்ரோ நகரில் முதல் தடவையாக பெண் வாடகைக்கார் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெண்களின் கால் வடிவில் பாதணி

உலகப் புகழ்பெற்ற இஸ்ரேலிய பாதணி வடிவமைப்பாளர் கோபி லெவியால் புதிதாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் கால்கள் வடிவிலான பாதணியை படத்தில் காணலாம்.

அவருடைய மகனுக்கு நான் தான் அப்பா என்று நினைக்கிறேன் !!!!

மறைந்த பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸனுக்காக தான் விந்தணுக்களைத் தானம் செய்ததாகவும் அவரது இளைய மகனான பிளாங்கட்டுக்கு தானே தந்தையாக இருக்கலாம் என நம்புவதாகவும் மைக்கேல் ஜக்ஸனின் முன்னாள் பிரித்தானிய மெய்க்காவலரான மட் பிடெஸ் திங்கட்கிழமை உரிமை கோரியுள்ளார்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

தலையில் குத்தப்பட்ட கத்தி 3 வருடங்களின் பின் அகற்றப்பட்ட அதிசயம்!

இளைஞர் ஒருவரின் தலையில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் குத்தப்பட்ட கத்தி ஒன்றை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். சுமார் 3 மணித்தியாளங்கள் இந்தச் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்து மன்னராட்சி முட்டாள்தனமானது

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது என்றும், இன்றைய நாகரீக காலத்துக்கு ஏற்றது அல்ல என்றும் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விமர்சித்து இருக்கிறார்.

கூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ

கூந்தலைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடியதும் தலையை மசாஜ் செய்யக் கூடியதுமான நவீன ரோபோ ஒன்றை ஜப்பானின் பிரபல 'பெனசொனிக்' நிறுவன விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வடகொரியா அதிபரின் மகன் கிம் ஜோங் உன் பொய்யான பெயரில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர்

வடகொரியா அதிபர் கிம் ஜோங் இல், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அவர் தன் 3-வது மகன் கிம் ஜோங் உன்-னை தன் வாரிசாக நியமிக்க தீர்மானித்து இருக்கிறார். அவர் இந்த மாத இறுதியில் நியமிக்கப்பட இருக்கிறார்.

தொடர்ந்து குதித்து உலக சாதனை

லண்டனிலுள்ள டவர் பாலத்துக்கு அருகே காலில் இறப்பர் நாடாவை கட்டியவாறு ஒரு மணி நேரத்தில் 42 தடவைகள் குதித்து பிரித்தானியரான ஜேம்ஸ் பீல்ட் ஞாயிற்றுக்கிழமை சாதனை படைத்துள்ளார்.

பாடனாரின் கட்டியணைப்பால் உயிருக்கு போராடும் பெண்

44 வயது பெண் ஒருவர் கொடிய நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதற்கு, அவர் சிறு வயதாக இருந்தபோது பாட்டனாரின் கட்டியணைப்புக்கு உட்பட்டமையே காரணமென கண்டறியப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

மனிதக்குரங்கு வேடத்தில் ஓட்டம்

மனிதக் குரங்கு வேடமிட்டு சுமார் 700 பேர் பங்கேற்ற விநோத ஓட்டப் பந்தய நிகழ்ச்சி லண்டனில் இடம் பெற்றது.

மனிதக் குரங்குகள் பராமரிப்பு தொண்டு ஸ்தாபனமான கிரேட் கொரில்லா' அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முகமாக தேம்ஸ் நதிக்கரையோரம் 4.3 மைல் தூரத்துக்கு இந்த ஓட்டப் பந்தய நிகழ்வு இடம்பெற்றது.

வெண்சங்கு கழுத்து...

'சங்கு போன்ற கழுத்து...' என்பார்கள் உவமைக்கு! பராமரிப்பு, உடல் எடை, வயோதிகம் இவற்றின் அடையாளம் முதலில் கழுத்தில்தான் பிரதிபலிக்கும். ஆனால், பல பெண்கள் அந்தக் கழுத்துக்கான முக்கியத்துவத்தை தராமல் விடுவதால்... கழுத்தில் கருமை தட்டுவது, மடிப்புகள் விழுவது, முரடு தட்டிப் போவது என சீக்கிரத்திலேயே வயோதிக தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.

சரி... இதற்கு என்ன பண்ணலாம்?!

உலக மேடையில் மீண்டும் பழைய நாடகம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம். சர்வதேச அரங்கில் முக்கியமானதொரு மேடை.

அந்த மேடையில் அமெரிக்கத் தலைவர் ஏறி நின்றபோது, அவர் என்ன பேசப் போகிறார் என்று முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது.

கண்களை அலங்கரிக்க

கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்... பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது.

கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..?

ஒரு குழந்தை, 'குமரி'யாக, 'குமரனா'க உருமாறும் சந்தோஷத்தை அனுபவிக்கும் பெற்றோர்கள், கூடவே, 'சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்...' என்றும் பரிதவிப்பார்கள். கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..? இன்றைய வாழ்க்கை சூழலில் 28-35 வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இது 'சரி', 'இல்லை' என்ற இரு வேறு கருத்துகள் உலவுகின்றன.

முகப்பருவிற்கு......


பருவுக்கு வீட்டிலேயே ஒரு முதலுதவி. வசம்பு, கொத்தமல்லிவிதை, பாச்சோடி (இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்) இவை மூன்றிலும் தலா 25 கிராம் எடுத்து கொண்டு, கழுவி சுத்தம் செய்யுங்கள். மூன்றையும் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு மணி நேரம் காய வைத்து பிறகு குளிர்ச்சியான தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் முகப்பரு காணாமல் போகும். முகப்பருவை தொடாதீங்க, கிள்ளாதீங்க முக்கியமான விஷயம் இது.

உள்ளங்கைக்கு எலுமிச்சை எக்ஸர்சைஸ்

ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டிதான். ரேகைகள் தேய வைக்கும் இந்த வேலைகளால் 'பட்டுப் போன்ற கைகள்' ஒரு கட்டத்தில் பரிதாபமாக மாறலாம்.

உயிருடன் உள்ளார் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.. அபாய கட்டத்தைத் தாண்டினார்!

இசையமைப்பாளர் சந்திரபோசின் உடல்நிலை அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது மகன் வினோத் கூறினார்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

இசை அமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்

காக்கி சட்டை போட்ட மச்சான்..., சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..., பச்சபுள்ள அழுதுச்சின்னா..., டில்லிக்கு ராசான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே..., காளை காளை முரட்டுக்காளை... பூஞ்சிட்டுக் குருவிகளா புதுக்கோட்டை கிழவிகளா... உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்.

இரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி..?

இரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார்.

டீன்ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதில்லையா?

நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா?

இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?

சமையலறை டிப்ஸ்

எலுமிச்சை பழத்தினை லேசாக தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும்.

வாழைப்பூ, போன்ற கைகளில் கறை படிய வைக்கும் காய்கறிகளை நறுக்கும்போது கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இதனால் கறை படுவதை தடுக்கலாம்.

கோபம் தன்னையே அழித்துவிடும்

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல.
மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்“ என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்... கோபம் ஏன் ஏற்படுகின்றது?

வெளிநாட்டில் இரண்டு இலங்கையர்கள் பலி!

டோகா கட்டார் நகரில் இலங்கையர் ஒருவர் தீயினால் எரியுண்டு மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லஷ்கர் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்து நிற்குமா இலங்கை?????

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் ஈ தொய்பா என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு இலங்கையை ஒரு தங்குமிடமாகப் பயன்படுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆணைக்குழு விசாரணையில் கிளிநொச்சியில் வெடித்துச் சிதறியவை........

“கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு'வின் விசாரணை அமர்வுகள் அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றன. அங்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களைத் தொகுப்பாக இங்கு தருகிறோம்.

போரின் இறுதியில் மக்கள்மீது இராணுவத்தினர் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர்

பெண்மையை ஆய்தமாக பயன்படுத்திய ரஷ்ய உளவாளி

ரஷ்ய பெண் உளவாளி அன்னா சாப்மன், தனது பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தியதாக, அவரது முன்னாள் காதலர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் பெண் உளவாளியான அன்னா சாப்மன், அமெரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். தனது அழகால், மனிதர்களின் மனங்களை வீழ்த்திய அன்னாவுக்கு, "கவர்ச்சி உளவாளி' என்று பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர். மேலும், தனது பெண்மையை, உளவு வேலைக்கு மிகச் சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியதாக அவரது முன்னாள் காதலர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து, அன்னாவின் மூன்று முன்னாள் காதலர்கள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர். டென்னிஸ் இர்டிட் என்பவர் கூறியதாவது: எதிராளியிடம் தனக்கு வேண்டிய தகவல்களை பெறுவதற்கு, அன்னா தனது பெண்மையை மிகப் பெரிய ஆயுதமாக கையாண்டாள். அதற்காக, அவள் எந்த எல்லைக்கும் போவாள்.

காதல், பொறாமையால் சக பெண் ஸ்கை டைவரை கொலை செய்த பெண்

வான் டோரன்

பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் கிளாட்மான்ஸ் (25), வான் டோரன் (37). இரண்டு பெண்களும் பாராசூட் மூலம் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்தவர் 25 வயதுள்ள மார்சல். வான் டோரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண்களுமே மார்சலை விரும்பி உள்ளனர். ஆனால், மார்சலுக்கு வான் டோரன் மீது விருப்பம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கிளாட்மான்ஸ் பொறாமையில் இருந்தார்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

காதல் பூட்டுகள் (படங்கள் இணைப்பு)

உலகில் சில நாடுகளில் காதலர்கள் தமது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு வித்தியாசமான உத்தியொன்றை  கையாண்டு வருகின்றனர்.

சனி, 25 செப்டம்பர், 2010

மாணவர்களே எனிமேல் நீங்கள் எங்களை பெயர் சொல்லி அழையுங்கள்

பிரிட்டனிலுள்ள ஆரம்பப்  பாடசாலையொன்று அங்குக் கற்கும் மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களை  சேர், மெடம் என்று  அழைக்கும் பாரம்பரியத்தை கைவிட்டு  ஆசிரியர்களின் முதல் பெயரை கூறி அழைக்கும் புது வழக்கத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது.

விசாரணை செய்யும் அதிகாரம் நிபுணர் குழுவுக்கு இல்லை ஜனாதிபதியிடம் பான் கீ மூன் தெரிவிப்பு!

இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடை யாதென்று ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

7 யானைகள் ரயிலில் அடிபட்டு பலி

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ரயிலில் அடிபட்டு 7 யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகளை அடுத்த வாரம் தான் சந்தித்து பேசவுள்ளதாக இந்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

'நாய்க்கு தீட்டு' - தீண்டாமை குற்றச்சாட்டு

தலித் கொடுத்த உணவை உண்டதால் "நாயும் தீண்டத் தகாதது ஆகியது"

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில கிராமம் ஒன்றில் உயர் சாதிக்காரர் வளர்த்த ஒரு நாய்க்கு தலித் பெண்ணொருவர் உணவளித்ததற்காக அப்பெண் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒரு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.

காதல் களியாட்டத்தை மறைக்க நடந்த கடத்தல் நாடகம்

இளைஞர் சமுதாயம் இன்று எதனையும் பொருட்படுத்தாது தம் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர். அதனை வீட்டிலுள்ள பெரியவர்கள் தடுப்பதில்லை, திருத்துவதுமில்லை.

பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதற்கு பெற்றோருக்கு நேரமில்லாமலிருக்கிறது. பெற்றோரின் அசட்டை காரணமாக இன்பங்களை தேடிச் செல்லும் இளசுகள் இறுதியில் சீர்கெட்டுவிடுகின்றனர்.

அறுபது அடி உயரத்தில் அழிச்சாட்டியம் பண்ணிய அந்த இளைஞர்...

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்குப் பயணிகள் வருகிறார் களோ இல்லையோ. ஆனால் ஆர்ப் பாட்டக்காரர்கள் வருவது வழக்கம். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துக்கொண்டி ருப்பார்கள்.

தீர்ப்பென்றால் தீர்ப்பு இதுதான் தீர்ப்பு

தனது மகளை ஒரு வருட காலப் பகுதியில் தினசரி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்த தந்தையொருவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றமொன்று வெள்ளிக்கிழமை 14,400 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

போட்டோ பிரதி இயந்திரங்கள் இயக்குபவர்கள், அருகே இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது......

போட்டோப் பிரதி இயந்திரங்கள் செயற்படுவது எப்படி?

நீங்கள் பிரதி எடுக்க இருக்கும் அசல் பொருளிலிருந்து ஒளித்தெறிப்பு அடைந்து, அவ்வொளியை உணரச்செய்யும் மின் உருளை அல்லது பெல்ட் இல் வீழ்ந்து மறை பிம்பமாக மாறும். பின் அது பேப்பரில் பிரதியாக அச்சாகும். இந்தச் செயற்பாட்டின்போது சூழலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும் அதனால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் எவை என்பதையும் பார்க்கலாம்.

சொரியாசிஸ் என்றால் என்ன?

சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள். தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும்.

சோதனைகளைச் சாதனைகளாக்கிய சமீதா சமன்மலி.....

ஆண்டவன் ஒரு வழியை மூடினால் இன்னொரு வழியை திறப்பான் என்பது வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும் போது நாம் எல்லோரும் முணுணுக்கும் வார்த்தை. இது இன்று சமீதா சமன்மலியின் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.

சவூதியில் வீட்டுப்பணிப்பெண்கள் சந்தித்து வரும் சிக்கல்கள்

நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது, கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப் பட்டது என்று. வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல் பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப் பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தி யிலேயே (அதே நகல்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம் ! (படங்கள் இணைப்பு)

பார்வையாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, பெண் பயிற்சியாளர் ஒருவரை திமிங்கிலம் ஒன்று தண்ணீருக்குள் இழுத்து சென்று, கடித்து, குதறி கொன்ற கொடூர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

காகிதத்தில் சிற்பம் செய்து..

யாரிடம் எந்த திறமை இருக்கும், அது எப்போது அவரிடம் இருந்து பூக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்கு ஓரு உதாரணமாக விளங்குகிறார் ரமேஷ்.

இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது

சண்டிலண்ட்ஸ் க்ரோவ், ஹைடவுன் பகுதியை சேர்ந்தவர் ஹினா படேல். 37 வயதாகும் இவர் மேரிசைடு ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பாடசாலையில் பயிலும் மாணவர்கள் இருவரை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விந்தணுக்களைப் பாவித்து ரகசிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது

M16 புலனாய்வுத்துறையின் தலமைக் காரியாலயம்
இங்கிலாந்து உளவு அமைப்பான `எம்16' சார்பாக ரகசிய ஆவண குறிப்புகளை எழுத மனிதனின் வியர்வை, விந்து உள்ளிட்ட திரவ கழிவுகளை மையாக பயன்படுத்திய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. முதலாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில், 1909-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரையிலான ரகசியக் குறிப்புகளை இதுபோன்று தான் `எம்16' உளவுப் பிரிவு அதிகாரிகள் எழுதி இருக்கின்றனர்.

கணவரை கொன்ற பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது

அமெரிக்காவில் கணவர் மற்றும் கணவருடைய மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 14 சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு விஷ ஊசி போடப்பட்டது.

பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆபியா சித்திக் (வயது 38) என்ற பெண் விஞ்ஞானியை கடந்த 2008-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ சோடியம் சயனைடு மற்றும் அமெரிக்காவில் முக்கிய இடங்களில் தாக்குதல் குறித்த சில குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அரவாணிக்கு அமெரிக்கா அழைப்பு

அமெரிக்காவில் 2 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய அரவாணி கல்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது வரும் 1ம் தேதி அமெரிக்கா செல்கிறேன். 2 வாரம் சுற்றுப்பயணம் செய்கிறேன்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல