திங்கள், 31 ஜனவரி, 2011

பாரிசவாதத்தைத் தடுக்கும் பசுப்பால்

பாரிசவாயு, திமிர்வாதம் அல்லது பாரிசவாதம் என்ற நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையிலேயே பல வருடங்களைக் கழித்து மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

யாழ் சம்பவங்களும் ஊடகங்களும்

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ் அரசாங்க அதி பர் திருமதி இமெல்டா சுகுமார் தெரி வித்துள்ளார். லண்டன் பி.பி.ஸி. தமிழோசைக்கு கடந்த 26ம் திகதி வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக யாழ் மக்களைப் பீதியில் உறைய வைத்த பல வன்செயல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. இதன் விளைவாகவே யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பொலிஸ் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லங்கா ஈ நியூஸ் தலைமையகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது: முற்றாகச் சேதம்

மாலபேயில் இருந்து இயங்கிவரும் எமது லங்கா ஈ-நியூஸ் இணையத்தள அலுவலகம் இன்று அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் நினைவு நாள்

த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நம்பமுடியாத கண்கட்டு வித்தை

கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம்

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ் மக்கள் வாழும் இடங்களாகக் காணப்பட்ட போதிலும் இன்று அந்த சூழல் வெகுவாக மாறிவிட்டது. மாற்றங்கள் சகஜம்தான்.

ஆனால் சிலாபத்தில் இருந்து 26 கி. மீ. தொலைவிலும் புத்தளத்தில் இருந்து 42 கி. மீ. தொலைவிலும் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மீன்பிடிக் கிராமமான உடப்பு, எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் தனித் தமிழ் கிராமமாக விளங்கி வருகிறது. இது பலரும் அறியாத உண்மை.

இரண்டு சக்கரம் இரண்டு இருக்கைகளுடன் சொகுசு கார்!

சீனாவின் சங்காய் நகரத்தில் PUMA நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்தக்கார்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. மணிக்கு 56கிலோ மீற்றர்கள் பயணம் செய்யகூடிய வகையில் இதன் எஞ்சின் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 பவுண்ஸ் எடையுள்ள இந்த கார் இரு இருக்கைகளை மாத்திரம் கொண்டுள்ளதோடு இரு பெரிய சக்கரங்களை கொண்டது சிறப்பம்சமாக உள்ளது. திருமண தம்பதிகள் அல்லது காதல் யோடிகள் சந்தேசமாக வெளியில் சென்றுவர பெரிதும் பயனுள்ளதாக இந்த கார் அமைந்துள்ளது.

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் அபூர்வ புகைப்படங்கள் ஏலம்! இந்த புகைப்படம், 22 லட்ச ரூபாய்க்கு ஏலம்போனது.

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரும், இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் சந்தித்துப் பேசிய அபூர்வ புகைப்படம் லண்டனில் ஏலம் விடப்பட்டது. ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் தனிப்பட்ட போட்டோகிராபராக பணியாற்றியவர் ஹென்ரிச் ஹாப்மேன்.

இருமலின் போது ரத்தம் – புற்றுநோய்க்கான 8 அறிகுறிகள்

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் திகழ்கிறது. அதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தில் உள்ள கிலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தீயின்றியும் ஒளியை ஏற்படுத்த முடியும்

கோயில் குட முழுக்கு, திருமணம், நீத்தார் இறுதிச் சடங்கு என நீளும் எல்லாச் சடங்குகளிலும் தீ வளர்த்து, வேதம் ஓதி சடங்கு செய்வதை ஒரு அடிப்படையான செயல்முறையாகக் கொண்டுள்ளனர் ஆரியர். அவர்களுக்கு அக்னி எனப்படும் தீ, ஒரு முதன் மையான தெய்வமாக இருந்துள்ளது. இதை ஆய்வு செய்வது தான் இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கம்.

பிரித்தானிய ஆர்வலர் கண்டுபிடித்த “பிஜிபெட்ரேல்”

தீவுகளில் வாழும் “பிஜிபெட்ரேல்” என்ற பறவையை கப்பலில் சென்ற பிரித்தானிய இயற்கை ஆர்வலர் ஜோன் மக்கில்விரே என்பவரே கண்டறிந்தார். வளர்ச்சி அடையாத கடல்புறா போன்ற தோற்றம் கொண்டவை “பிஜிபெட்ரேல்”.

பழம்பெரும் மாளிகையில் அமையவுள்ள ஹோட்டல்

உலகில் செல்வத் திரவியத்தினதும், சீர்கேட்டினதும் பாரிய அடையாளச் சின்னங்களில் ஒரு இரவைக் கழிப்பதற்காக பிரான்ஸ் அரசு அங்கு வரும் உல்லாசப் பயணிகளிடம் 800 டொலர்களை அறவிடத் தீர்மானித்துள்ளது.

இதில் ஒன்று The Chate au de Versalles என்பதாகும். இது ஒரு காலத்தில் சூரியக் கடவுள் என அழைக்கப்பட்ட XIV லூயிஸ் மன்னனின் மாளிகையாகும்.

மனைவியை தவிர்த்துவிட்டு செக்ஸ் பொம்மைகளுடன் உல்லாசப் பயணம்

கனடாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, ஆளுயர செக்ஸ் பொம்மைகளுடன் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உல்லாசப் பயணம்  மேற்கொண்டுள்ளார்.

வந்துவிட்டது பெரிய மார்புக்கச்சை (படங்கல் இணைப்பு)

இதுகாலவரையில் பெண்கள் தங்களுக்கேற்ற அளவிற்கு மார்புக்கச்சைகள் கிடைக்காததால் இறுக்கமான மார்புக் கச்சைகளை அணிந்து பல பிரச்சினைகளை சந்தித்தனர். அதிலும் மிகவும் குண்டான பெண்களுக்கு ஏற்ற மார்புக் கச்சைகள் எடுக்க இய்லாத நிலையில் அவர்கள்தான் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி வந்தனர் என்றே சொல்லவேண்டும்.

ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ்

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்தநாட்டை சேர்ந்தவர்? எந்த மதத்தை சேர்ந்தவர் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. இவர் இந்தோனேசியாவில் பிறந்தவர். அவர் கிறிஸ்தவர் அல்ல. எனவே அவர் அமெரிக்க ஜனாதிபதி பதவி வகிக்க தகுதியற்றவர் என்பன போன்ற விவாதங்கள் அமெரிக்க மக்களிடையே நிலவி வந்தது.

சனி, 29 ஜனவரி, 2011

மோ.சைக்கிள் விபத்து வயோதிபர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதியதில் கால் முறிவடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8மணிக்கு சாவகச்சேரி பெருங் குளத்தில் நடைபெற்றது. இவ்விபத்தில் கண்டிவில் லேன், தபால் கந்தோர் வீதி,சாவகச்சேரியைச் சேர்ந்த செல் லையா நமசிவாயம் (வயது 74)என்பவரே கால் முறிவடைந்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயோதிபத் தம்பதியினர் மீது புங்குடுதீவில் தாக்குதல்

புங்குடுதீவு 10வட்டாரத்திலுள்ள வீட்டில் தனித் திருந்த வயோதிப தம்பதிகள் இருவர் இனந் தெரியா தோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தி நினைவு தினம்

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் சதீஷ் வாகன விபத்திலேயே உயிரிழந்தார் : யாழ் பொலிஸார்

யாழ். பருத்தித்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சிக் கிழக்கு பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் கொலை செய்யப்படவில்லை எனவும் அவர் வாகன விபத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிகேர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமக்கு இன்னமும் உறுதியான தகவல் தெரியவில்லை எனவும் தான் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கணவனை தேடி சென்னை சென்ற பெண்

தனது கணவருக்கு அவரது பெற்றோர் வேறொரு திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைப் பெண்ணொருவர் சென்னை பொலிஸாரிடம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முறைப்பாடொன்று செய்துள்ளார்.

இது தொடர்பில் சென்னை பொலிஸார் தெரிவிக்கையில்,

ஆன்டன் செக்கோவ் பிறந்த நாள்

ஒரு ரஷ்ய சிறுகதை எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவர், உலக இலக்கியத்தில் மிகப் பெரும் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவராவார். இவரது நாடகாசிரியர் பணிக்காலத்தில் இவர் கடற்புறா (The Seagull), அங்கிள் வான்யா (Uncle Vanya), மூன்று சகோதரிகள் (Three Sisters), செர்ரிப் பழத்தோட்டம் (The Cherry Orchard) ஆகிய நான்கு ஆக்கங்களை உருவாக்கினார். இவரது சிறந்த சிறுகதைகள் பிற எழுத்தாளர்களாலும், திறனாய்வாளர்களாலும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தனது இலக்கியத்துறைப் பணிக்காலத்தின் பெரும்பகுதியில் அவர் மருத்துவத் தொழில் புரிந்து வந்தார். "மருத்துவம் எனது சட்டபூர்வமான மனைவி, இலக்கியம் எனது வைப்பாட்டி" என அவர் ஒரு முறை குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

மஹிந்தவிடம் 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டு அமெ. தமிழர்கள் வழக்கு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, நீதிக்குப் புறம்பாக நடத்தப்பட்ட கொலைகளுக்காக சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷ 30 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு அமெரிக்காவில் உள்ள ஈழத் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுகொலை!

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுகொலை!

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இலங்கைப் பெண் சவுதியில் கைவரிசை

சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர், வேலை வழங்குனர் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த வேளையில் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களையும் மற்றும் மின் உபகரணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.

குறித்த பெண் ஜித்த மேற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து கையடக்க தொலைபேசி, மடிக்கணனி மற்றும் பணம் என்பன ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாலியல் மோகங் கொண்ட மனைவியிடமிருந்து காப்பாற்றக் கோரி கணவர் பொலிஸில் தஞ்சம்

பாலியல் உறவில் திருப்தியடையாமல் தொடர்ந்து அதற்கு வலியுறுத்தும் தனது மனைவியிடமிருந்து தன்னை பாதுகாக்கும்படி கணவரொருவர் பொலிஸாரிடம் தஞ்சமடைந்த சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

விவாகரத்து பெற்று 57 வருடங்களின் பின்னர் மீளவும் திருமணம் செய்த ஜோடி (படங்கள் இணைப்பு)

விவாகரத்து செய்து 57 வருடங்களின் பின் தம்பதி யொன்று மீளவும் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

லெஸ்லி (93 வயது) மற்றும் எல்ஸி ஹார்பர் (வயது 90) ஆகி யோரே இவ்வாறு திருணம் செய்த தம்பதியாவர்.

மகள்மாரை சிறந்த பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி வதிவிட முகவரியை கூறிய பெண்

தனது பிள்ளைகளை சிறந்த பாடசாலையொன்றில் சேர்ப்பதற்காக போலியான முகவரியை வழங்கிய தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.

என் பராமரிப்பில் வளரும் குழந்தை ரஷ்ய பிரதமருக்கும் எனக்கும் பிறந்ததல்ல

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டினுடனான இரகசிய காதல் தொடர்பில் குழந்தையொன்றுக்கு தாயாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் உடற்பயிற்சி வீராங்கனையான அலினா கபயெவா, தனக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் குழந்தை எதுவும் பிறக்கவில்லையெனவும், தன் பராமரிப்பிலுள்ள குழந்தை தனது குழந்தையே அல்ல எனவும் தெரிவித்தார்.

23 ஆவது மாடியிலிருந்து விழுந்து பெண் உயிர் பிழைத்த அதிசயம்

23 ஆவது மாடியிலிருந்து விழுந்த பெண்ணொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற் றுள்ளது.

ஜோன் எப்.கென்னடியின் சடலத்தை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் வண்டி ஏலம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி படுகொலை செய்யப்பட்ட போது அவரது உடலை ஏற்றிச் சென்ற 1963 ஆம் ஆண்டு கால அம்புலன்ஸ் வண்டி ஒன்று, அரிஸோனா மாநிலத்தில் இடம் பெற்ற ஏல விற்பனையில் 120,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

வருடாந்தம் 120.000 பைந்து குருதியை ஏற்றினால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை

உயிர்வாழ்வதற்காக வருடாந்தம் 120.000 பைந்து குருதியை உடலில் ஏற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த 6 வயது சிறுவனொருவன் உள்ளாகியுள்ளான்.

ஜோர்தானில் இலங்கை பணிப்பெண்களின் ஆர்ப்பாட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்பைப் பெற்றுச் செல்வோர் அந்நாட்டு வேலை வழங்குநர்களினால் மிகவும் மோசமாக அடிமைகளைப் போன்று நடத்தப்படுவதாக புகார்கள் மலிந்துவருகின்றபோதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்செல்வோரின் தொகையில் வீழ்ச்சியேற்பட்டதாகத் தெரியவில்லை.

பிறந்த குழந்தையை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய் (படங்கள் இணைப்பு)

தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்தபின் அதன் சடலத்தை தனது வீட்டு மலசலகூடத்தில் விட்டுச் சென்ற தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை மலேசியாவில் இடம்பெற் றுள்ளது.

தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டு விவாதத்தின் போது இத்தாலிய பிரதமன் அதிரடி குறுக்கீடு

இத்தாலிய பிரதமர் சிவ்வியோ பெர்லுஸ்கொனி விலைமாதுகளுடன் கட்டணம் செலுத்தி பாலியலில் ஈடுபட்டாரா இல்லையா என்பது தொடர்பில் திங்கட் கிழமை இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்ட விவாத நிகழ்ச்சியின் போது இடை நடுவே தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெர்லுஸ்கொனி, நிகழ்ச்சியை நடத்தியவரை அவதூறு செய்து பார்வையாளர்களை அதிர வைத்துள்ளார்.

புதன், 26 ஜனவரி, 2011

பறக்கும் ஹோட்டல்

ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு உத்திகள் கையாளப்படுவதுண்டு. இவ்வாறு தான் ரஷ்யாவில் பெரிய ஹெலிகப்டரொன்றில் ஹோட்டலொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திர ஹோட்டல் உலகின் முதலாவது பறக்கும் ஹோட்டலாகும்.

கனவை தடுக்கும் குறட்டை

கனவு காணாத மனிதர்கள் இருக்க முடியாது. பார்வை குறைபாடு உள்ளவர்க ளுக்கும் கனவுகள் வருகின்றன.

சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்ப தாக விஞ்ஞான ஆராய் ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

எடிசனின் ராஜதந்திரம்

தோமஸ் அல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி. ஆனால் அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது, வணிகரான எடிசன் செய்த சில ராஜதந்திரம் சிரிப்பை வரவழைப்பவை. எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

இஸ்ரேலில் குண்டு அழகு ராணிப் போட்டி!

2011 ஆம் ஆண்டுக்கான குண்டு அழகு ராணியை தெரிவு செய்கின்றமைக்கான போட்டி இஸ்ரேலில் சில நாட்களுக்கு முன் இடம்பெற்றது.

இந்நாட்டில் குண்டு அழகு ராணிப் போட்டி கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தவறாது இடம்பெறுகின்றமை வழக்கம்.

லெனின் உடலை அடக்கம் செய்ய ஆதரவு

ரஷியாவின் மாபெரும் புரட்சி தலைவரான லெனின், கடந்த 1924-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சோவியத் யூனியன் உடைந்து ரஷிய நாடாக மாறி விட்டதால் லெனின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை வலுவடைந்துள்ளது.

இந்திய மாடல் அழகியை காதலிக்கும் ஆலிவுட் நடிகர்

பிரபல ஆலிவுட் நகைச்சுவை திரைப்படமான `தி மாஸ்க்' படத்தில் நடித்தவர், ஜிம் கேரி. புகழ் பெற்ற காமெடி ஹீரோவான இவர், ஜெனி மெக்கர்தி என்ற அழகியுடன் 5 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில், ஆஞ்சல் ஜோசப் என்ற இளம் மாடல் அழகியை காதலிக்க தொடங்கியுள்ளார். விழா, விருந்து உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர்.

தலைமுடியை விற்க மலேசியாவில் திட்டம்

இந்தியாவில் கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடிகளை, `விக்' தயாரிப்பு மற்றும் மருந்து பொருட்களுக்காக விற்பனை செய்வது வழக்கம். இந்தியாவில் போலவே, மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலிலும் இந்திய பக்தர்கள் முடி காணிக்கை செய்கின்றனர். ஆண்டு தோறும் தைப்பூச திருநாளில் கிலோ கணக்கில் முடி குவிகிறது. இது வரை, இந்த முடியை கழிவு பொருளாக ஆறுகளில் கொட்டி வந்தனர்.

முன்னாள் மந்திரி மனைவியுடன் உறவு வைத்த பாதுகாவலர்

ஆலன் ஜான்சனும் அவருடைய மனைவி லாரா ஜான்சனும்
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு வரை உள்துறை மந்திரியாக இருந்தவர் ஆலன் ஜான்சன். இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவரான அவருக்கு பாதுகாவலராக பால் ரைஸ் (வயது 45) என்ற சிறப்பு அதிரடிப்படை போலீஸ்காரர் இருந்தார். ஆலன் ஜான்சனிடம் பணியாற்றியபோது, அவருடைய மனைவி லாரா ஜான்சன் (வயது 46) மற்றும் பெண் உதவியாளர் ஆகியோருடன் பால் ரைஸ் உறவு வைத்துள்ளார். இந்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

நியுசிலாந்தில் இந்தியப் பெண் எரித்துக் கொலை

நியுசிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார். அங்கிருந்து பிஜி தீவுக்கு தப்பியோடிய அந்த பெண்ணின் கணவரை பிடிக்க சர்வதேச போலீசார் உதவியை நியுசிலாந்து கேட்டுள்ளது.

பிஜி தீவுக்கு ஓட்டம்

இலங்கையின் பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்து தொடர்பான சட்ட நிலைமை

திருமணம் என்ற பிணைப்பு பிள்ளைகளை உருவாக்கி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குகின்றன. ஆரோக்கியமான குடும்பங்களாக நிலைத்திருப்பதில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

புற்றுநோயை குணமாக்கும் ஒட்டகத்தின் சிறுநீர்

ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான மருந்து புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று அரபு நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 60 இலட்சம் பேர் புற்றுநோயின் காரணமாக இறந்து வருகின்றனர். அரபு நாடுகளில் இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கு அடுத்தபடியாக புற்றுநோயால் பாதிகப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது என கணிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போன பெண் மின்சார அதிர்ச்சியூட்டப்பட்டு கொலை!

பாகிஸ்தானில் உள்ள கிராமப்புற மக்களிடம் நீண்டகாலமாக ஒரு வழக்கம் உள்ளது. ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள அவளுடைய குடும்பத்தை சேர்ந்த மூத்த ஆண்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணுக்கு தண்டனை அளிக்கும்.

ஆடுகளுக்கு தாயான நாய்

தாய் ஆடு இறந்துவிட்டதனால் தவித்து நின்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு தாய்ப்பாலுக்கு நிகராக பாலூட்டி வருகிறது இங்குள்ள கருணையுள்ள நாயொன்று.. தாயை இழந்த ஆடுகளுக்கு இப்போது அம்மா இதுதான்.

உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வந்துள்ளது

உலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் சமீபத்தில் அபான்ஸ் நிறுவனத்தினால் இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த சலவை இயந்திரம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு இலகுவில் புரியக் கூடிய விதத்தில் உங்களுக்கு விளக்கம் கொடுக்கும். “சலவை இயந்திரமான என்னை நீங்கள் நான் சொல்வது போன்று இயக்கினால், உங்களுடைய உடைகள் மற்றும் ஏனைய துணிகளை தூய்மையாக சலவை செய்வதற்கு நான் உதவி செய்வேன்” என்று முதலில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்.

குச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள் திடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம்; கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர்கள் விரைவு !

திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அநுராதபுரம் சிறையில் மோதல் 3 பேர் பலி: 8 அதிகாரிகள் உட்பட 21பேர் காயம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோத லில் கைதிகள் 3 பேர் உயிரிழ ந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

‘சூதாட்டம்’ ஆகிப் போன பிரிட்டிஷ் இளவரசர் திருமணம்

இளவரசர் சார்லஸ் மகன் திருமணத்திலும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் வித்தியாசமான பரபரப்பு. சார்லஸ் மகன் வில்லியம் - கேட் திருமணம் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெகு விமரிசையாக நடக்க உள்ளது. இந்த திருமணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

மகரஜோதி மனித தயாரிப்பே. சபரிமலை தேவஸ்தானம் ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்

குழந்தையொன்றுக்கு ஏற்பட்ட பக்கவாத நோயை குணப்படுத்துவதற்கு தேவைப்பட்ட பணத்தை சேகரிப்பதற்காக போலந்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பலர் நிர்வாணமாக நின்று கலண்டர் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள பௌத்த விகாரை தாக்குதல்

சென்னையில் பௌத்த குருமாரின் சேவை மையம் மீது இனந்தெரியாத நபர்கள், நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியதில், இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த குருமார் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர் இலங்கையில் தஞ்சம் கோரவுள்ளனர்

இந்திய நாகப்பட்டிண மாவட்ட வேதார்ணயத்திற்கு அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

திங்கள், 24 ஜனவரி, 2011

பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

கெசல்கமுவ ஓயா ஆற்றின் நோர்வூட் நகருக்கு அருகிகிலுள்ள ஆற்றுப்பகுதியில் பெண்ணொருவரின் சடலத்தினை நோர்வூட் பொலிஸார் இன்று திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அநுராதபுரம் சிறைச்சாலை மோதலில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

அநுராதபுரம் சிறைச்சலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் கைதிகளுக்கும் இன்று மாலை மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் செல்ல முடியாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தல் பெண் கைதியொருவர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் 11 கைதிகளும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வின்ஸ்டன் சர்ச்சில் நினைவு நாள்

சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen´s Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார்.

ஜேர்மனிய கவர்ச்சி நடிகை ஸெக்ஸி கோரா பரிதாப மரணம்

தனது கவர்ச்சிகரமான தோற்றத்தால் ஜேர்மனிய திரைப்பட ரசிகர்களை ஆட்டிப்படைத்த கரோலின் பெர்ஜர் (ஸெக்ஸி கோரா எனும் செல்லப்பெயர்) , தனது மார்பகத்தை பெரிதாக்குவதற்கான 6 ஆவது சத்திரசிகிச்சையை அடுத்து கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளார்.
பாலியல் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் பெற்ற பெர்ஜர், கடந்த வருடம் ஜேர்மனிய “பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஒபாமாவின் முகமூடி அணிந்து வந்து வங்கியை கொள்ளையிட்ட நபர்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முகத் தோற்றத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அணிந்து வந்த நபரொருவர், வங்கியொன்றை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல