புதன், 23 பிப்ரவரி, 2011

மைக்கேல் டெலின் பிறந்த நாள்

மைக்கேல் டெல், டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர். டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.

விமானத்தில் வரும் இலங்கை பணிப்பெண்ணின் சடலம்

சவூதி அரேபியாவில் அவரது எஜமானியால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைப் பணிப்பெண்ணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

தங்கம், வைரம் கலந்த ஓட்கா

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஓட்டலில் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு அதற்காக, புது விதமான ஓட்கா மதுபானத்தை தயார்செய்தனர். சாப்பிடும் வகையிலான 24 காரட் சுத்த தங்க இலைகள், கடல் முத்துகள் இரண்டு, ஒரு காரட் வைரம் ஆகியவை இந்த மதுபானத்தில் சேர்க்கப்பட்டது.

மனைவியையும் இரு மகள்மாரையும் படுகொலை செய்த நபர் தானும் தற்கொலை

தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் படுகொலை செய்த நபரொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும் செயற்கைக்கோள்கள்

பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை செயற்கைக்கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான திட்டத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மாஸ்கோ நகரில் இருந்தபடி இரு நாட்டு விஞ்ஞானிகளும் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காக 2 செயற்கைக்கோள்களை ரஷியா - இங்கிலாந்து விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்ப இருக்கிறார்கள்.

கற்பழிப்பில் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்

மாதிரிப்படம்
இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருத்தி, ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாயுடன் 40 வயது ஆசாமி ஒருவர் அந்த பூங்காவுக்கு வந்தார். அந்த நாயை பார்த்ததும் அதன் அழகில் கவரப்பட்டு அந்த சிறுமி அந்த நாயுடன் விளையாடினாள். அந்த பெண்ணை கவனித்த நாயின் எஜமானர் அந்த சிறுமியை தேநீர் அருந்த அழைத்தார். அதற்கு சம்மதித்து வந்த சிறுமியை அவர் கற்பழிக்க முயன்றார்.

லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு பாதுகாப்பு வழங்க தயார்- மகிந்த ராஜபக்ஷ!

லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் அல் கடாபிக்கு தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சில் உள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மூலம் லிபிய தலைவருக்கு இராஜதந்திர மட்டத்தில் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட திருமாவளவன்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

மனித மூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கரத்தை உருவாக்கி சாதனை

மோட்டார் இயந்திரத்தால் செயற்படுத்தப்படும் வழமையான செயற்கை கரத்துக்கு பதிலாக மனித மூளையால் இயங்கும் செயற்கை கரமொன்றை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
கரத்தை இழந்த ஜெஸி சுலிவன் என்பவருக்கே இந்த செயற்கை கரம் பரிட்சார்த்தமாக பொருத்தி ஆய்வு செய்யப்பட்டது.

4 வருட காலமாக மண்டையோட்டை கத்தி ஊடுருவி இருப்பதை அறியாத நபர்

தனது தலையில் 4 அங்குல நீளமான கத்தி முனையொன்று இருப்பதை 4 ஆண்டுகளாக நபரொருவர் அறியாது வாழ்ந்த விசித்திர சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

மனைவியை அடித்து காயப்படுத்திய கணவரை நையப்புடைத்த பெண்கள் (காணொளி இணைப்பு)

தனது மனைவியை அடித்து உதைத்து காயப்படுத்திய கணவர் ஒருவர், உள்ளூர் பெண்களால் பிரம்பாலும் சவுக்காலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.

புகைப்படங்கள் வெளியானதால் ருவண்டா அமைச்சர் இராஜினாமா (படங்கள் இணைப்பு)

ருவண்டாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோசப் ஹபினெஸா, அவரது முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச் சாட்டையடுத்து பதவி விலகியுள்ளார்.

நிறையை குறைத்தால் அதிக வட்டி

தென் கொரியாவைச் சேர்ந்த “ஹனா வங்கி' நாட்டிலுள்ள பருமனானவர்களின் தொகையைக் குறைக்க விநோத ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைறைப்படுத்தியுள்ளது.

“பேஸ் புக்' இணையத்தளம் மூலம் அறிமுகமான நண்பர் மீது காதல் கொண்ட மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

“பேஸ்புக்' இணையத்தளம் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் மீது காதல் கொண்ட பிரித்தானிய மனைவியை 23 தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த செல்வந்த அமெரிக்கப் பொறியியலாளர் தொடர்பான வழக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

பெறா மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி 8 பிள்ளைகளுக்கு தாயாக்கிய நபர்

தனது மனைவிக்கு முந்திய திருமணத்தின் மூலம் பிறந்த மகளை பாலியல் துஷ்பி ரயோகம் செய்து 8 குழந்தைகளுக்கு தாயாக்கியதை மாற்றாந் தந்தையொருவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட சம்பவம் ஜேர்மனி கொப்ளென்ஸ் நகரில் இடம்பெற்றது.

கரண்டியால் புலியை அடித்து விரட்டி கணவனின் உயிரை காப்பாற்றிய மனைவி

தனது கணவன் மீது பாய்ந்து அவரைக் கடித்துக் குதற தயாரான புலியை பெரிய மரக்கரண்டியொன்றால் அடித்து பெண்ணொருவர் விரட்டிய சம்பவம் வட மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க் தயாரிக்கும் முறை

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க்கைத் தயாரிக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.

1. ஸ்டார்ட் (Start) கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில்(Search Box), Create a System Repair Disk என டைப் செய்திடவும். மேலிருக்கும் பட்டியலில் ஒரு ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.

தனது சொந்தப் பேரனை பெற்றெடுத்த 61 வயது பெண்மணி

இலினொயிஸ் மாநிலத்தில் குழந்தையொன்றை பிரசவித்த மிகவும் வயதான பெண்மணி என்ற சாதனை படைப்பு தனது மகளுக்கு வாடகைத் தாயாக செயற்பட்டு சொந்த பேரனை கருவில் சுமந்து 61 வயது பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மனிதக்குரங்கின் விநோத பாசம்

ஜப்பானில் டோக்கியோ நகருக்கு அண்மையிலுள்ள செய்தாமா சிறுவர் மிருகக் காட்சிசாலையைச் சேர்ந்த 5 வயதான அஞ்சனா என்ற மனிதக்குரங்கு, 9 வார வயதான சியரா என்ற காட்டுப் பூனைக்குட்டியை தாய்க்கு தாயாக பராமரித்து காண்பவர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறது.

அஞ்சனா சியாராவுக்கு புட்டிப்பாலை பரிவுடன் ஊட்டுவதை படத்தில் காணலாம்.

பொறாமையால் காதலன் காதைக் கடித்து துப்பி நாய்க்கு இரையாக்கிய பெண்

அளவு கடந்த பொறாமையால் தனது காதலன் காதைக் கடித்து துண்டாக்கி அதனை நாயொன்றுக்கு இரையாக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

சுவாமி பிரேமானந்தா காலமானார்

திருச்சி பாத்திமாநகரில் ஆஸிரமம் நடத்தி வந்தபோது கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தா சாமியார் இன்று சென்னையில் காலமானார்.

உங்களால் தான் நாங்கள் தெருவில் அலைகின்றோம்"- களவுக்காகச் சென்ற கள்வனுக்கு நேர்ந்த கதி

உரும்பிராய் கோகுல வீதியில் உள்ள பூட்டிய வீடு ஒன்றில் திருடுவதற்காக மதில் ஏறிப் பாய்ந்த வேளை அவ் வழியால் ரோந்து சென்ற படையினரில் ஒருவர் இதனை அவதானித்துள்ளார். உடனடியாக வீடு சுற்றிவளைக்கப்பட்டது. ஓடுவதற்கு இடமில்லாத திருடன் படையினரிடம் சரணடைந்தார்.பின்னர் படையினர் தங்களது அனைத்து கோபதாபங்களையும் சேர்த்து நையப்புடைத்துள்ளனர். "உங்களைப் போன்றவங்களின் வேலையினால் தான் நாங்கள் இப்போதும் வீதியில் அலைய வேண்டி இருக்கின்றது" என்று சிங்களத்தில் சொல்லிச் சொல்லி படையினர் திருடனைத் தாக்கியதாக அங்கு நின்ற மக்கள் தெரிவித்தனர். பின்னர் கடுங்காயங்களுக்கு உள்ளான திருடனை படையினர் அவனது முழுவிபரங்களையும் பதிவு செய்துவிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர். தான் கொண்டுவந்த சைக்கிளையும் காயங்களுடன் ஓட முடியாது உருட்டிச் சென்றுள்ளான் திருடன்,

சனி, 19 பிப்ரவரி, 2011

பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்

மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

இவர் பல மாதங்களாக யாழ். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்த சில வாரங்களாக இவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.

பார்வையிருந்தும் 17 வருடங்கள் குருடியாக சவுதியில் இருந்த இலங்கைப் பெண்!

சுமார் 17 வருடங்களாக சவுதி அரேபியாவில் ஊதியம் ஒன்றும் வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்ணாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

நண்பர்கள் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கிறது

தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலங்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆணி ஏற்றப்பட்ட மற்றுமொரு பணிப்பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில்

சவூதி அரேபியாவில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண் கைகளில் ஆணி ஏற்றிய நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

கையில் 12, காலில் 14 விரல்களுடன் பெண் குழந்தை! (படங்கள் இணைப்பு)

மியான்மரில் ஒரு பெண் குழந்தை கையில் 12 விரல்களுடனும், காலில் 14 விரல்களுடனும் பிறந்துள்ளது. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. மியான்மரைச் சேர்ந்த பெண் பியோ மின்மின் சோ (26). இவருக்கு லீ யதி மின் என்ற பெண் குழந்தை பிறந்தது. வழக்கத்துக்கு மாறாக இந்த குழந்தையின் கையில் 12 விரல்களும், காலில் 14 விரல்களும் உள்ளன. பிறந்து 16 மாதமாகி உள்ள இந்த குழந்தையின் குடும்பம் வறுமை நிலையில் உள்ளது.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

பிள்ளையாரும் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டார்?

யாழ். ஆனைக்கோட்டை சம்பந்தப் பிள்ளையார் கோயில் நேற்று நண்பகல் கொடிக் கம்பத்திற்கு முன்பாகவுள்ள மூலாதாரப் பிள்ளையார் விக்கிரகம் திருடப்பட்டுள்ளது.

தமிழ்ப் படத்தில் பிரபாகரன்!

மகாத்மா காந்தி மீண்டும் வந்தால் என்ன நிகழும். என்பதை கருவாக வைத்து உருவாகிகொண்டிருக்கும் படம் 'முதல்வர் மகாத்மா'. 'காமராஜ்' திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.

மீனவர்கள் பிரச்சினைக் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் கீழே....

17.02.2011

கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு

கலைஞர் அவர்களுக்கு

ஓர் அவசரக்கடிதம்!....

பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!...

நீச்சல் வீராங்கனை நிர்வாண போஸில்

போலந்தின் பிரபல இளம் நீச்சல் வீராங்கனை லூய்ஸா ஹிரினிவிக்ஸ் பிளேபோய் சஞ்சிகைக்கு நிர்வாணப் போஸ்கொடுத்துள்ளார்.

கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்த யாழ். தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்

சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் போலீஸ் உடையில் இருந்த சிலர் இலங்கை தமிழ் மாணவர்கள் இருவரை அடித்து உதைத்து, அவர்களிடம் இருந்த செயினையும், செல்போனையும் பறித்துக் கொண்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று (17.02.2011)

இலங்கை தமிழ் இளைஞர்கள்
அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது எச்.எல். ஹன்லி எனும் நீர்மூழ்கி கப்பல் அமெரிக்க யுத்த கப்பலொன்றை மூழ்கடிப்பதில் பங்குபற்றியது. யுத்த கப்பலொன்றை மூழ்கடித்ததில் சம்பந்தப்பட்ட முதலாவது நீர்மூழ்கி கப்பல் இதுவாகும்.

1924: முதலாவது காலநிலை செய்மதியான வான்கார்ட்-2 ஏவப்பட்டது.

1979: வியட்நாம் மீது சீனா படையெடுத்தது.

உலகின் மிகவும் சிக்கனமான நீர் பாவனையுள்ள மலசலகூட உபகரணம்

மலசலகூட உபகரணங்களை உற்பத்தி செய்து வரும் முன்னணி ஜப்பானிய கம்பனியான “இனக்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் சிக்கனமான நீர்ப் பாவனையுடைய புதிய மலசலகூட உபகரணத்தை படத்தில் காணலாம்.
ஒரு தடவை கழுவுவதற்கு 4 லீற்றர் நீரை மட்டும் உபயோகிக்கும் “சற்றிஸ்' என்ற மேற்படி மலசலகூட உபகரணம் செவ்வாய்க்கிழமை டோக்கியோ நக ரிலுள்ள நிறுவனத்தின் காட்சிகூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது ஊழியர் ஒருவர் விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.

காதலனை சந்திக்கும் முயற்சி மரணத்தில் முடிந்த அவலம்

தனது ஆருயிர் காதலனை சந்திப்பதற்காக 8 ஆம் மாடியிலுள்ள குடியிருப்பொன்றிலிருந்து துவாய்கள் மற்றும் ஒரு படுக்கை விரிப்பு என்பவற்றை இணை த்து கட்டி கீழ் தளமொன்றிலுள்ள வரவேற்பு பகுதிக்குள் தரையிறங்க முயற்சித்த இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர், கை நழுவி தரையில் விழுந்து பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனியின் நிர்வாண புகைப்படங்கள் ஒரு மில்லியன் பவுணுக்கு விற்பனை

மாதிரிப்படம்
பெண்கள் கூட்டத்தின் மத்தியில் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி நிர்வாணமாகத் தோன்றும் புகைப்படங்கள் ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் விலைக்கு இத்தாலிய சஞ்சிகைகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவர்க்காரம் மற்றும் சலவைத் தூள் என்பவற்றை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையான யுவதி (படங்கள் இணைப்பு)

மனிதர்களில் இருந்து வித்தியாசமாக ஒரு பெண்மணி சவர்க்காரத்தை பிரதான ஆகாரமாக உண்கிறார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் என்ற 19 வயது பெண்ணே இந்த விசித்திரப் பழக்கத்தை உடையவர்.

பன்முக கலைஞர் கபிலா வாத்சாயன்

இந்திய குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் பெருமைமிகு பத்ம விபூஷண் விருது பெற்றவர்களின் பட்டியலில் பிரபல நாட்டிய கலைஞர் கபிலா வாத்சாயனின் (82) பெயரும் இடம்பெற்றிருந்தது. நாட்டிய துறைக்காக இவர் ஆற்றியுள்ள பணிகளை கெளரவிக்கும் வகையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

சிறுவர் தொடர்பான பிரச்சினைகளும் சட்டப் பாதுகாப்பும்

கடந்த கட்டுரைகளில் திருமணம் மூலமாகப் பிறக்கின்ற பிள்ளைகளுக்கும், மகவேற்பு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கும் பெற்றோர் இயற்கைப் பாதுகாவலராகவும், சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கைத் துணைகளிடையே பிரச்சினை ஏற்படுகின்ற மூன்றாம் நபரும், அரசும் பாதுகாவலராக செயற்படுபவர் என்பதைப் பார்த்தோம்.

3 நிமிடங்களில் காதல் தேர்வு!

பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் புகைப் பழக்கத்தை விட முடியுமா?

மருத்துவ சிகிச்சை மூலம் புகைப் பழக்கத்தை விட வைக்க முடியுமா என மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக உலகளவில் ஆண்டுதோறும், 50 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயின் காரணமாக பலியா கின்றனர். சிலர், அந்த பழக்கத்தை எளிதாக விட்டு விடுகின்றனர். சிலரால், என்ன செய்தும் அந்த பழக்கத்தை விட முடிவதில்லை.

54 வருடங்களுக்கு பின்னர் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற தாய்

இரண்டு வருட தீவிர விசாரணைக்கு பின்னர் தான் பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்க்கு 54 ஆண்டுகள் கழித்து சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ரூபி குளோகோவ் (74).

ஆண் நண்பர் இல்லை; இங்கிலாந்து அழகி ஏக்கம்

இங்கிலாந்து நாட்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர், ஜெசிகா லைன்லி. சட்ட மாணவியான இவர், ஆறு மாதங்களுக்கு முன் `மிஸ் இங்கிலாந்து' பட்டம் பெற்றார். ஆனால், இதுவரை ஒரு ஆண் நண்பர் கூட தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 5 அடி 11 அங்குலம் உயரத்துடன் ஆண்களை கவரும் வகையில் இருக்கும் இந்த 21 வயது அழகியை யாரும் காதலிக்கவும் இல்லை.

கொக்கா-கோலா தயாரிப்பின் இரகசியம் அம்பலமாகியதா?

இதுவரை காலமும் பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் கொக்கா-கோலா பானத்தின் மூலப் பொருள்கள் எவையென்ற ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்க வானொலி நிலையமொன்று தெரிவித்துள்ளது.

டெங்குக் காய்ச்சல் மாணவன் மரணம்

டெங்குக் காய்ச்சல் காரணமாக அல்வாய் வடக்கில் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த தர்ம ரட்ணம் துஷாந் (வயது 18) என்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவனே உயிரி ழந்தவர் ஆவார்.

கோண்டாவில் காளி அம்மனுக்கு பைபர்கிளாஸில் தேர்

கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி ஸ்ரீ சிவ மஹாகாளி அம்பாள் தேவஸ்தான புதிய சித்திரத்தேர் வெள் ளோட்ட விழா நேற்று இரவு 7.00 மணிக்கு நடைபெற்றது.

மாட்டையும் கடத்துகிறார்கள்

மண்டைதீவில் உரிமை கோரப்படாத மாடுகளை கடத்தி அவற்றை இறைச்சிக்கு வெட்டும் நடவடிக்கையில் வெளியார் சிலர் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். இவ்வாறு இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த மாடொன்றினை படையினர் கண்டு அதனை மீட்டு காப்பாற்றியுள்ளனர். இத்தகைய நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

‘Love affair’ killer jailed

By Nour Abuzant

A Sri Lankan man was sentenced by a Doha court of first instance to seven years imprisonment for “beating a compatriot to death”. The victim’s family is entitled to get QR200,000 blood money from the accused, the court ruled.

புதன், 16 பிப்ரவரி, 2011

நாங்கள் செய்தது தவறு எங்களை மன்னியுங்கள் - இந்திய மீனவர்கள்-!

வடபகுதி கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் மேற்கொண்டதை இந்திய கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதுடன் தமக்கு மன்னிப்பளித்து விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.

பிரபல சிங்கள திரைப்பட நடிகை வினு வெத்தமுனி படுகொலை!

பிரபல சிங்கள திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரத்மலானையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காதலை தந்தை கண்டிக்க : மகள் தற்கொலை

யாழ்.குருநகர் ரெக்களமேசன் பகுதியைச் சேர்ந்த திருக்குடும்ப கன்னியர் மடத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

விஜய குமாரதுங்க நினைவு நாள்

இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் இலங்கை அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் கணவராவார். 1988 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

பேஸ் புக் தில்லுமுல்லு குறித்து 400 முறைபாடுகள்

பேஸ் புக் எனப்படும் முகப்புத்தக வலைத்தளத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 400ற்கும் அதிகமானவர்கள் குறித்து முறைபாடுகள் கிடைத்துள்ளதென இலங்கை கணினி அவசர பிரச்சார அமையம் தெரிவித்துள்ளது.

நாய் குரைத்ததால் உரிமையாளருக்கு சிறை

வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள், இரவு நேரத்தில் அவை குரைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். இது, இத்தாலியில் நடந்த சம்பவம். அந்த நாட்டின் சிசிலி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இரவில் அந்த நாய்கள் கடுமையாக குரைத்ததால் அருகில் இருப்பவர்கள் அவதிப்பட்டனர்.

இணையதளம் மூலம் பெண் தோழிக்கு புகைப்படம் அனுப்பிய எம்.பி. ராஜினாமா

அமெரிக்காவில் மேற்கு நியுயார்க் பகுதியில் இருந்து குடியரசு கட்சி சார்பாக இரண்டு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர், கிறிஸ்டோபர் லீ. இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். கிறிஸ்டோபருக்கு இணையதளம் மூலமாக பெண் தோழி ஒருவர் அறிமுகமானார். இந்த நிலையில், மேல்சட்டை அணியாமல் வெற்றுடம்புடனான தனது புகைப்படத்தை அந்த தோழிக்கு கிறிஸ்டோபர் அனுப்பி வைத்தார்.

நல்ல சுகதேகியாக இருந்து உடல் பயிற்சி செய்யும் மஹிந்தர்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மிகவும் ஆரோக்கியம் ஆக உள்ளார் என்று தகவல் வெளியிட்டு உள்ளது 'திவயின' சிங்கள பத்திரிகை.

கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சென்று இருந்தார்.

'குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படைக்கு ஒத்துழையுங்கள்'

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் துண்டுப்பிரசுரங்கள்

‘குடாநாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்புப் படையினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை பொருட்படுத்தாது பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல