செவ்வாய், 30 நவம்பர், 2010

அணுசக்தி விஞ்ஞானி குண்டுத்தாக்குதலில் பலி (படங்கள் இணைப்பு)

மஜீத் ஷஹ்ரியா
ஈரானில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் அந்நாட்டு அணுசக்தி விஞ்ஞானியொருவர் பலியானதுடன் பிறிதொரு அணுசக்தி விஞ்ஞானி காயமடைந்துள்ளார். மேற்படி அணு சக்தி விஞ்ஞானிகள் பயணம் செய்த கார்களிலேயே குண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம் பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.பழைய கட்டிடம் ஒன்றினை உடைத்துக் கொண்டிருந்தபோது அக் கட்டிடம் இடிந்து விழுந்ததினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழிந்த சப்பாத்தை திரும்பத்திரும்ப தைத்து அணிந்த கோடீஸ்வரர்

லி கா சிங், ஹொங்கொங் நாட்டின் அதி பிரபல செல்வந்த வர்த்தகர். இவர் கிழக்கு ஆசியாவின் பெரும் பணக்காரர், உலகில் 14 ஆவது செல்வந்தர், பெப்ரவ 2010 மதிப்பீட்டின் படி 21.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்திற்கு அதிபதியாவார்.

27 வருடங்களாக ஒரே துவாயைத் தொடர்ந்து உபயோகித்த பெரும் செல்வந்தர்

வாங் யங் சிங்க் என்பவர் தாய்வான் தேசத்தில் பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை நிறுவிய செல்வாக்குள்ள பிரபல தொழிலதிபர். 2008 ஆம் ஆண்டு போப்ஸ் சஞ்சிகை நடத்திய ஆய்வின்படி இவர் 5.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்தைக் கொண்டுள்ள உலகில் 148 ஆவது செல்வந்தராவார். இவர் ராய்ப்பாய் நாட்டில் சின் தின் நகரில் பிறந்தார்.

சூனியத்தில் ஈடுபட்ட 72 வயது பெண்மணி உயிருடன் தீவைத்து படுகொலை

சூனியக்காரியாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 72 வயது பெண்மணி ஒருவர் 5 பேரைக் கொண்ட குழுவினரால் உயிருடன் தீவைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கானாவில் இடம்பெற்றுள்ளது.

பிஸ்கட் உண்ட 14 வயது சிறுமிக்கு உள்ளங்கைகளில் சூடம் ஏற்றி கொடுமை

ஐந்து பிஸ்கட்டுக்களை வீட்டு உரிமையாளர் இல்லாத சமயம் உண்டமைக்கான தண்டனையாக 14 வயது சிறுமியின் உள்ளங்கைகளில் சூடம் ஏற்றி கொடுமை செய்த சம்பவம் ஒன்று மொறாஹேன பகுதியில் இடம் பெற்றுள்ளது.

திங்கள், 29 நவம்பர், 2010

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் கொலை (படங்கள் இணைப்பு)

பிரித்தானியாவில் கடைத்தொகுதி ஒன்றை நடத்தி வந்த 48 வயதுடைய இலங்கையரான சுப்பபையா தர்மசீலன் என்பவர் கொள்ளையர்களால் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுமென்றே தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

மற்றுமொரு இலங்கை பெண் உயரிழந்துள்ளார்!

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த, மற்றுமொரு இலங்கை பெண் உயரிழந்துள்ளார். மகரகம தாபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.டப்ளியூ.நந்தாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் சவூதி சென்றதுடன் இந்த வருடம் நாடு திரும்பவிருந்தார்.

அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும்

அகிம்சைப் போராட்டத்தின் போது சிங்களத் தலைவர்கள் உரிய அரசியல் தீர்வு வழங்காததன் காரணமாகவே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என் பதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அந்த யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த விடயங்களுக்கு அரசியல் தீர்வு வழங் கப்படாவிட்டால் மீண்டுமொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மக்களை வெளியேற உத்தரவு!

கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் நீண்டகாலமாக குடியிருந்த மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள தால் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இரத்தினபுரம் சிங்களப் பாடசாலைக்குப் பின்புறமாகவுள்ள நிலத்தில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியிருந்துள்ளனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது

பிரித்தானியாவில் கைது செய்யப்படலாம் என முன்னர் தனது பயணத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டார். தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்கு செல்லும் அவரின் பாதுகாப்புக்களை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என பிரித்தானிய அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.

வீக்கி லீக்ஸ் இணையத்தில் இலங்கை இரகசியங்கள்

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வசம் உள்ள இரண்டு இலட் சத்து ஆயிரத்து 287 இரகசிய ஆவணங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கை தொடர்பானவையாகும். இவற்றில் சீனா தொடர்பான 8 ஆயிரத்து 320 ஆவணங்களும் ஆப்கானிஸ்தான் தொடர்பாக 7 ஆயிரத்து 95 ஆவணங்களும் இந்தியா தொடர்பாக 5 ஆயிரத்து 87 ஆவணங்களும் பாகிஸ்தான் தொடர்பாக 4 ஆயிரத்து 775 ஆவணங்களும் இலங்கை தொடர்பாக 3 ஆயிரத்து 166 ஆவணங்களும் பங்களாதேஷ் தொடர்பாக 2 ஆயிரத்து 182 ஆவணங் களும் அடங்கியுள்ளன.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

மாணவிகள் எழுதிய வாசகம் மெக்சிகோவில் பரபரப்பு

நாளை மக்கள் படுகொலை நடக்கும் என்று 4 பள்ளி மாணவிகள் விளையாட்டாக எழுதி வைத்த வாசகம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

கோப்புக்களின் வகைகள்

txt: நோட்பேடில் (note pad) நாம் டைப் செய்து சேமிக்கும் ஃபைல்கள் டெக்ஸ்ட் ஃபார்மெட்டுகளாக சேமிக்கப்படும். அனைத்து விண்டோஸ் இயக்கத்தளங்களிலும் இந்த ஃபைல்களை திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிங்க் வைரம் £29m மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையானது

ஜெனிவா ஏலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அரிதாக கிடைக்கும் பிங்க் வைரம் £29m மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. ஜெனிவாவில் உள்ள பியு ரிவாஜ் ஓட்டலில் 24.78 காரட் எடையுள்ள அரிதாக கிடைக்கும் பிங்க் வைரம் ஏலம் விடப்பட்டது.

அந்தரத்தில் கண்ணாடிக் கூடம் (படங்கள் இணைப்பு)

உலகில் உயரமான கட்டடங்கள் பல உள்ளன. கண்ணாடியால் ஆன கட்டடங்களும் உள்ளன. ஆனால் உலகில் மிக உயரமான கட்டடத்தில் கண்ணாடிக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீயர்ஸ் கோபுரக் கட்டடத்தில் 103 வது மாடியில் இந்த கண்ணாடிக்கூடம் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான 4 கண்ணாடிப் பெட்டிகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது. 1353 அடி பரப்பளவு கொண்ட மாடிக் தளம் வலையில் தொங்குவது போல் காணப்படுகிறது. மேலும் கீழே இருந்து பார்த்தால் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்றுகிறது.

போனோகிராஃப் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்ட நாள்

போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone), என்பது 1870களில் இருந்து 1980கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும்.

படுகாயமடைந்த இளைஞர்கள்

விபத்தில் படுகாயம்

ஆட்டோ, மோட்டார் சைக்கிள் விப த்தில் இளைஞர் ஒருவர் படுகாயம டைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமை யில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கல்வியங்காட் டைச் சேர்ந்த ப.வசந்தகுமார் (வயது-34) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பை இந்திய அமைச்சர் கிருஷ்ணா தவிர்த்தார்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்றுக் காலை சந்திப்பதாக இருந்த போதிலும் இறுதி நேரத்தில் அச்சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கிடைத்த தகவலால் - சாவகச்சேரி வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி முறியடிப்பு

தேசிய சேமிப்பு வங்கியின் சாவகச்சேரி கிளையில் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய மூன்று பேர் அடங்கிய கொள்ளைக் கோஷ்டியின் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தெரிவித்தார்.

புலிகளின் சர்வதேசத் தலைவர் புலனாய்வுப் பிரிவால் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர் ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் கொ ழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலீட்டாளர் என்ற போர்வை யில் இலங்கைக்கு விஜயம் செய்தி ருந்த போது அரச புலனாய்வுப்பிரி வினர் குறித்த நபரை கைதுசெய் துள்ளதாக படைத்தரப்பை ஆதா ரங்காட்டி கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் ஒரே கிராமத்தில் 98 இரட்டையர்கள்

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகாலங்களில் 98 இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ள கிராமத்தின் பெயர் ஹேஷான் கிராமம். இது ஹூனான் மாநிலத்தில் உள்ளது. 2 சதுர கி.மீ. பரப்பளவே உள்ள இந்த கிராமத்தில் தான் கடந்த 50 ஆண்டுகளில் 98 குடும்பங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. இதற்கு என்ன காரணம்.?

20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்

ஹூவாக்ஷி கிராமம்
சீனாவில் ஒரு கிராமம் மிகுந்த பணவசதி உள்ளதாக இருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் ஹூவாக்ஷி. இது ஜியாங்ஷூ மாநிலத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும். இதன் பரப்பு ஒரு சதுர கி.மீ. ஆகும். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு சுற்றுலா கம்பெனி ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களை வைத்து இருக்கிறது.

பாகிஸ்தானில் 3 வயது இந்து சிறுமி கடத்தல்

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள காஷ்மோர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கணேஷ் சந்த். அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். கணேஷின் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தனர். கோவிலுக்கு வெளியே ஒரு கடையில் இரண்டு குழந்தைகளும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் வந்து இளைய மகளை கடத்திச் சென்றனர்.

கிறிஸ்தவ தேவாலயத்தில் நாய்க்கு பெயர் சூட்டு விழா

அமெரிக்காவை சேர்ந்தவர் ரஸ்சல் ஸ்மித். இவர் திருமண ஏற்பட்டாளராக இருந்து இறுதி சடங்குகளுக்கான அமைப்பாளரானவர். இவர் நாய் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர். இவர் புதிதாக ஒரு நாயை வாங்கினார். இந்த நாய்க்கு ஷெரிடான் என்று பெயர் சூட்டினார்.

மூடிய குளியலறையில் 3 வாரங்களாக சிறைபட்டிருந்த 69 வயது பெண்மணி

தனது வீட்டுக் குளியலறையிலிருந்து வெளியேற முடியாது 3 வாரங்களுக்கு மேலாக சிறைப்பட்டிருந்த பெண்மணியொருவர் மீட்கப்பட்ட சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

கண்ணி விளக்கங்கள் சில

Computer - Common Operation Power Utilizing Techinical Electronic Reader.

PC - Personal Computer.

BIOS - Basic Input Output System

MOUSE - MOst USE full (device).

CD - Compact disck.

இணைய முகவரி விளக்கங்கள்

.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.

.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.

ஆலிவுட் நடிகை மீது நடிகர் வழக்கு

ஆலிவுட் நடிகர் சார்லி சீன் மீது நிர்வாண புகழ் நடிகை கிறிஸ்டினா என்கிற கேப்ரி ஆண்டர்சன் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். நியுயார்க்கில் உள்ள மான்கட்டான் ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது, தன்னை அடித்து உதைத்ததோடு கத்தியை காட்டி சார்லி சீன் மிரட்டினார் என்று சமீபத்தில் கிறிஸ்டினா தெரிவித்தார். மேலும், ஓட்டல் குளியல் அறையில் பூட்டி வைத்தாகவும் கூறினார்.

சர்வதேச இணையதள முகவரிகள்

.ac - அசென்சன் தீவு
.ad - அண்டோரா
.ae - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
.af - ஆ·ப்கானிஸ்தான்
.ag - ஆண்டிகுவா-பார்புடா
.ai - அங்குல்லா
.al - அல்பேனியா
.am - ஆர்மேனியா

மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகிய நாள்

மார்கரெட் தாட்சர பிரித்தானியாவின் முதற் பெண் பிரதமர். மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1979 முதல் 1990 வரை பிரதமராக பணியாற்றினார்.

பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்.

இவர் 1990ம் ஆண்டு ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.

பேஸ் புக்கில் பின்பற்றுவதற்கு உகந்த 10 கட்டளைகள்

நண்பர்கள் மாத்திரம்

பேஸ் புக்கில் உங்கள் விபரங்களை அனைவரும் பார்க்கக்கூடியதாகவோ அல்லது நீங்கள் தெரிவு செய்த நண்பர்கள் மாத்திரம் பார்கக்கூடியதாகவே ஒழுங்கமைத்துக்கொள்ள வசதியுண்டு. இவற்றை எதை தெரிவு செய்ய வேண்டுமென தீர்மானியுங்கள். பொதுவாக இரண்டாவதை தெரிவு செய்வது பாதுகாப்பானது.

தமிழில் வலைப்பூக்களுக்கு

பொதுவாக கூகிள் அட்சென்ஸ் தமிழில் வலைப்பூக்களுக்கு விளம்பரம் தருவது இல்லை.

சனி, 27 நவம்பர், 2010

நிருபர்களை தகாத வார்த்தையில் திட்டிய அதிபர்

நிர்வாண மாடல் அழகியை திருமணம் செய்துள்ள பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு ஆட்சி நிர்வாகத்திலும் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஓய்வு வயதை உயர்த்தியதால் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், `கராச்சிகேட்' உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது தொடர்பாக, நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மிகவும் ஆத்திரம் அடைந்தார்.

புகைப்படக் கருவி முன் தற்கொலை செய்த இளைஞன்

ஜப்பானிய இளைஞர் ஒருவர் இணையத்தள புகைப்படக் கருவி முன் தற்கொலை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கனடா தமிழருக்கு ஐந்து வருட சிறை

தனது மகளையும் மகளின் காதலனையும் வானால் மோதிக் கொல்ல முயற்சி செய்தமைக்காக 47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்பவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள்..!

“மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர்.

யாழில் தினசரி பத்திரிகை அலுவலகம் நேற்று இனந்தெரியாதோரால் ஆக்கிரமிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள தினக்குரல் தினசரிப் பத்திரிகை அலுவலகம் நேற்று அதிகாலை இனந்தெரியாதோரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது.
நேற்று அதிகாலை வான் ஒன்றில் கட்டைகள், கத்திகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்திறங்கிய ஆயததாரிகள் இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது.

யானை முகத்துடனும் தும்பிக்கையுடனும் பிறந்த பன்றிக்குட்டி (படங்கள் இணைப்பு)

சீனாவில் யானை முகத்துடனும் தும்பிக்கையுடனும் பிறந்த பன்றிக்குட்டியை  படங்களில் காணலாம்.

இரண்டு முகங்களுடன் பிறந்த பன்றிக்குட்டி (படம் இணைப்பு)


சீனாவில் இரண்டு முகங்கள் நான்கு கண்களுடன் பன்றிக்குட்டி பிறந்துள்ளதை காணலாம்.

குரங்கைப்போல் பிறந்த பன்றிக்குட்டி (படங்கள் இணைப்பு)

சீனாவில் குரங்கைப்போல் முகவடிவு கொண்டு பிறந்த பன்றிக்குட்டியை படங்களில் காணலாம்.

இரண்டு வாய்களுடன் பிறந்த பன்றிக்குட்டி (படங்கள் இணைப்பு)

சீனாவில் இரண்டு வாய்களுடன் பிறந்த பன்றிக்குட்டியை  படங்களில் காணலாம்.

புலிகளின் கடிதம்

மாவீரர்நாள் அறிக்கை
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

நடிகர் ஆர்யாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

‘தான் ஒரு மலையாளி என்றும், அதன் காரணமாக பெருமைபடுவதாகவும், தமிழ்நாட்டு மக்களை விட கேரள மக்கள் நல்ல ரசிப்பு தன்மை கொண்டவர்கள் என்றும், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கோடிகளை குவிக்கலாம் என்றும்’ ஆர்யா பேசியதே புயலை கிளப்பியிருக்கிறது.

ஒபாமாவின் உதட்டில் காயம்: 12 தையல்கள்......(படங்கள் இணைப்பு)

கூடைப்பந்து போட்டியின் போது அமெரிக்க அதிபர் ஒபாவின் உதட்டில் லேசாக அடிபட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரின் உதட்டில் டாக்டர்கள் 12 தையல் போட்டுள்ளனர். இது குறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ரூபர்ட்ஸ் கிப்ஸ் கூறுகையில்,

வட பகுதியில் சிங்கள மக்கள் குடியேறுவதில் தவறென்ன?

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படிக் கூறமுடியும் என தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பி உள்ளார்.

ரிஸானாவுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

நான்கு மாத குழந்தையை கொலை செய்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரிஸான நபீக்கிற்காக மன்னிப்புக் கோர அமைச்சரவை அமைச்சர் ஒருவர் ரியாத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் குறித்த குழந்தையின் தந்தையார் நைப் ஜிஷியான அலாப் அல்-ஒட்டாபியிடம் சென்று மனித அபிமான அடிப்படையில் பணிப்பெண் ரிஸானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக வர்த்தக மற்றும் முதலீட்டு விவகார அமைச்சர் ரிஷாத் பதியுடீன் தெரிவித்துள்ளார்.

புரூஸ் லீ பிறந்த நாள்

அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.

புஷ் எழுதிய புத்தகம் விற்பனையில் சாதனை

ஒபாமாவுக்கு முன்பு எட்டு ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் தற்போது புத்தகம் எழுதும் பணியிலும் இறங்கிவிட்டார்.

தடம் மாறும் யாழ்ப்பாணம்


யாழ்ப்பாண நகரின் மத்தியில் எழிலுற தனக்கேயுரிய மிடுக்குடன் அமைந்திருக்கிறது அந்தப் பாடசாலை. அப்பிரபல பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்றும் புகழ்பூத்த கல்விமான்களாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கூட அந்தப் பாடசாலையில் பயின்றவர்கள் புகழ் பெறும் அளவிற்கு அப்பாடசாலையின் கல்வித்தரம் அன்றே மேலோங்கியிருந்தது. பல சீர் மிகு கல்வியாளர்களை உருவாக்க்கிய கலைக்கூடத்திற்கு தனிப்பட்ட அலுவல் ஒன்றின் நிமித்தம் அண்மையில் விஜயம் செய்த பாக்கியம் கிடைத்தது. அங்கு கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவரைச் சந்திப்பதற்காகவே சென்றிருந்தேன்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி

யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.

இரு பெண்களைக் கொன்ற 19 வயது இளைஞனுக்கு மரணதண்டனை

இரு பெண்களை படுகொலை செய்து நபரொருவரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் ஒருவனுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் வட ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

வடபகுதியில் கொள்ளையர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் கொள்ளைகள் என்பன அடிக்கடி இடம்பெற்று வருவது குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். இருந்தும் கூட அவை கட்டுக்கடங்கியதாகவோ அவற்றை தடுத்து நிறுத்த காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவோ தெரியவில்லை. இதனால், யாழ். மக்கள் சதா அச்சத்துக்கும் பதற்றத்துக்கும் மத்தியிலேயே வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காணாமல் போனோரை விடுதலை செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் குழுவினர்

வாகரை பிரதேச செயலகத்தில் ஒரு சில கிராம சேவக உத்தியோகத்தர்கள் மூலமாக குழுவொன்று பொது மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட பொலிஸ் குழுவினர் கொழும்பில் இருந்து வாகரைக்கு நேற்று வந்துள்ளனர்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனுடனான வாராந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் காணொளி...

வரலாற்றில் இன்று

1944: ஜேர்மனியின் வி-2 ரொக்கட் மூலம் பிரிட்டனில் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டதில் 168 பேர் பலி.


1944: பெல்ஜியத்தின் மீது ஜேர்மனி வி-2 ரொக்கட் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.

Megaupload Downloader

இணையத்தில் பல தளங்கள், பைல்கள் ஸ்டோர் செய்வதற்கென செயல்படுகின்றன.

இவற்றில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பைல்களை அப்லோட் செய்து வைத்து, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். யு ட்யூப் போன்ற தளங்களில், வீடியோக்களையும் அப்லோட் செய்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் எந்த சாப்ட்வேர் புரோகிராமினையாவது டவுண்லோட் செய்திட வேண்டுமாயின் நாம் சில தடைகளை அல்லது தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

மகாத்மாகாந்தி, நேரு ஆகியோரது கொள்கைகளை இந்தியா மீறிவிட்டது

இந்தியாவின் நடவடிக்கைகள் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. மகாத்மா மற்றும் நேருவின் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாகவே கருதுகிறேன் என மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்படுவதை தடுக்கும் விசேட உள்ளாடை

விமான நிலையங்களில் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஊடுகாட்டும் முறைமையின் கீழ் தமது அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்படுவது குறித்து கவலையடைந்துள்ள விமானப் பயணிகளுக்கு உதவும் முகமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ள உள்ளாடையை படத்தில் காணலாம்.

தமிழ் கட்சிகள் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்துள்ளது!.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையே இன்று முற்பகல் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

தேவையற்ற ஈமெயில்களை ஜிமெயிலில் எப்படி தடை செய்வது

நம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடமிருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

நிச்சயமாக அவை பயனற்றவை என தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டி ருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸூக்கு அனுப்பாமல் இருக்கும் வசதி யினை ஜிமெயில் தருகிறது.

இனிமேல் தான் பிரச்னை ஆரம்பம் : வனிதா சிறப்பு பேட்டி

சென்னை : நடிகர் விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதலில், இனி மேல் தான் பிரச்னை ஆரம்பம் என அவரது மகள் வனிதா ஆவேசமாக தெரிவித்தார்.

மோசடி கும்பல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம்

 

டாக்டர் சிவபாலனின் சாட்சி

 

Image Hosted by ImageShack.us

ஹன்ஸிகாவுடன் பிரபுதேவா புதுக் காதல்... ஹோட்டலில் நயன்தாரா சண்டை!

ஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, நயன்தாராவுடன் கள்ளக் காதல், திருமணத்துக்கு முயற்சி என வேறு ரூட்டில் பயணித்து வருகிறார்.

சேர் பொன் இராமநாதனின் நினைவு நாள்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

வாழ்க்கை வரலாறு

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆபிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல